வாள் வெட்டுக்குள்ளான பொலிஸ் உத்தியோகர்களைச்சந்தித்தார் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜெயசுந்தர

0
360

-பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் வந்த பொலிஸ் மாஅதிபர் வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொலிஸ் உத்தியோகர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜெயசுந்தர நேற்று (31) யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதிப்பகுதியில் இரு பொலிஸார் மீது இனந்தெரியாத குழு வாள் வெட்டுத்தாக்குதல் நடத்தியது. அதையடுத்தே அவர் யாழ்ப்பாணத்துக்கு திடீரென வந்துள்ளதுடன், அண்மைக்காலமாக யாழ்.மாவட்டத்தில் பொலிஸார் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து தாக்குதலாளிகளைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் பொலிஸ்  உயரதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.pu (1) pu (2)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here