பொத்துவில் ஜனாஸா நலன்புரிச்சங்கத்திற்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 1.5 மில்லியன் நிதியுதவி

0
291

2856d8bf-729a-433d-a1ce-5130308d69f3ஆர்.ஹசன்
பொத்துவில் மக்களின் நீண்ட காலத்தேவையாகவுள்ள ஜனாஸா வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்காக பொத்துவில் ஜனாஸா நலன்புரிச்சங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 1.5 மில்லியன் (15 இலட்சம்) ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

ஜனாஸாக்களைக் கொண்டு செல்வதற்கும் அதனுடன் தொடர்புடைய வேலைகளைச் செய்வதற்கும் தேவையான ஜனாஸா வாகனமொன்றைக் கொள்வனவு செய்ய பங்களிப்புச் செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் பொத்துவில் ஜனாஸா நலன்புரிச்சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கமையவே மேற்படி நிதி வழங்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இராஜாங்க அமைச்சரின் காத்தான்குடி காரியாலயத்தில் வைத்து இதற்கான காசோலை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷனூடாக பொத்துவில் ஜனாஸா நலன்புரிச்சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொத்துவில் உலமாக்கள் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாஸா வாகனம் கொள்வனவு செய்வதற்குத் தேவையான மிகுதித் தொகை சேகரித்துள்ளதாகவும், இராஜாங்க அமைச்சருடைய மிகப்பெரிய பங்களிப்பு இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு உறுதுணையாக இருந்ததாகவும், அவருக்கு பொத்துவில் மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இதன் போது பொத்துவில் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.2856d8bf-729a-433d-a1ce-5130308d69f3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here