சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவி தேவை- பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர.

0
286

(பாறுக் ஷிஹான்)

20561775_1441105472625359_1887352506_nயாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவி தேவையாக உள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் இன்று(1.8.2017) இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழுக்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர்
பல இடங்களில் இருந்து கலந்து கொண்ட மக்கள் மத்தியில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் யாழ் குடநாட்டில் இடம்பெறும் சகல குற்றச் செயல்கள் தொடர்பிலும் தகவல்களை வழங்குமாறு மக்களிடமும் ஊடகங்களிடமும் கோரிக்கை விடுத்த அவர் குற்றச்செயல்கள் குறித்து ஏதாவது தகவல்கள் தெரிந்தால் 0717582222 அல்லது 0718592020 என்ற தனது தொலைபேசி இலக்கங்கள் மூலம் நேரடியாகத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.(F)20561876_1441104132625493_454486143_n 20562948_1302928846472974_687077290_n 20614288_1441104122625494_2109541069_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here