பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் சொந்த நிதியிருந்து மக்கள் பயன்பாட்டுக்கு மா அரைக்கும் இயந்திரம்

0
207

எம்.ரீ.ஹைதர் அலி
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் சொந்த நிதியிலிருந்து புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் பிரதேசத்தைச்சேர்ந்த மக்கள் பயன் பெறும் வகையில் மா அரைக்கும் இயந்திரமொன்று அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

இதனூடாக இப்பிரதேசத்தினைச்சேர்ந்த மக்கள் ஏனைய  இடங்களை விட மிகக்குறைந்த விலையில் மா அரைக்க முடிவதோடு, குறித்த மா அரைக்கும் இயந்திரத்தினால் பெறப்படும் வருமானம் இயந்திரப் பராமரிப்பு மற்றும் மின்சாரத்தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

வறிய குடுப்பத்தினைச்சேர்ந்த மக்களின் வாழ்வாதார்த்தினை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு செயற்றிட்டங்களில் இதுவும் ஒரு கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இத்திட்டமானது, சுயதொழில் ஊக்குவிப்பிற்கான முன்னுதாரணமான ஒரு வேலைத்திட்டமாக அமைந்துள்ளது.HRS_0216 HRS_0220 HRS_0230 HRS_0232

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here