வெள்ளப்பாதிப்பு தெனியாயவுக்கு ஒன்பது இலட்சம் பெறுமதியான உதவிகள் நாளை கையளிக்கப்படும்-கிழக்கு மாகாண முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட்

0
166

16244196_1396486920370227_835759549_nமுதலமைச்சரின் ஊடகப்பிரிவு
நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கடந்த ஜூன் மாதம் மாகாண சபையில் அவசரத்தீர்மானமொன்றை நிறைவேற்றியிருந்தார்.

இதற்கமைவாக நாளைய தினம் கிழக்கு மாகாண சபையினால் தெனியாய பகுதியில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மற்றும் சேதமடைந்த வீடுகளையுடையவர்களுக்கான கட்டடப்பொருட்கள் கையளிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

இதனடிப்படையில், வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சேகரிக்கப்பட்ட 9 மில்லியன் ரூபா செலவில் இந்த உதவிப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

நாளைய தினம் காலை 10 மணியளவில் தெனியாய பிட்டபெத்தர பிரதேச செயலகம் மற்றும் தெனியாய கொட்டபொல பிரதேச செயலகம் ஆகியவற்றில் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதன் போது, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண உயர்மட்ட அரச அதிகாரிகளும் இந்நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here