கல்குடாத்தொகுதி அமைப்பாளர் HMM.றியாழின் அழைப்பில் கல்குடா அபிவிருத்தித்திட்ட அங்குரார்ப்பண நிழ்கழ்வுகளில் அமைச்சர் ஹக்கீம்

0
272

ட்டத்கல்குடாத்தொகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான HMM.றியாழ் அவர்களின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 13.08.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்குடாவில் இடம்பெறவுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண ஆரம்ப நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத்திட்டமிடல் அபிவிருத்தி வடிகாலமைப்பு அமைச்சருமான கெளரவ அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

குடிநீர் இணைப்பு, வீதிகள் அபிவிருத்தி, சிறுவர் பூங்கா நிர்மாணம், அணைக்கட்டு நிர்மாணம் என சுமார் 450 மில்லியன் நிதியொதுக்கீட்டில் இப்பாரிய அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக கல்குடாத்தொகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான HMM.றியாழ் அவர்கள் கல்குடா நேசனுக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பிலான விஷேட சந்திப்பொன்று நேற்று 02.08.2017ம் திகதி புதன்கிழமை அமைச்சர் கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்களது இல்லத்தில் இடம்பெற்றதுடன், இச்சந்திப்பில் கல்குடாத்தொகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான HMM.றியாழ் அவர்களும் முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் ULM.முபீன் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் 13 ம் திகதி பெறும் நிகழ்வுகளில் அடுத்து ஆரம்பிக்கப்படவிருக்கும் சுமார் 2000ம் கோடி குடிநீர்த்திட்டம் பற்றிய அறிவிப்பையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளில் மாகாண, மாவட்ட, பிரதேச அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஊப்பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here