அலுத்கமையில் கொலைசெய்யப்பட்ட முஸ்லிம் வாலிபர்கள் நல்லாட்சியின் பலி கடாக்களா ?

0
252

unnamedதாஜுதீனின் கொலையில் காட்டும் அக்கறை அலுத்தகமையில் கொல்லப்பட்டவர்கள் மீது இந்த நல்லாட்சியாளர்கள் காட்டாதது ஏன் என குருனாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ கேள்வி எழுப்பினார்.

குருநாகலை திவ்லபிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்..

இன்றைய அரசின் அரசியல் வியாபாரப் பொருளான தாஜுதீனின் கொலையில் காட்டும் அக்கைறையானது அளுத்கமை கலவரத்தில் கொல்லப்பட்ட இருவர் மீதும் இல்லாமல் இருப்பது ஏன் என்ற வினாவே தாஜுதீனின் கொலையானது மீள மீள தோண்டப்படுவதானது அரசியல் இலாபம் கொண்டதென்பதை மேலும் உறுதி செய்துள்ளது.

எந்த விடயமாக இருந்தாலும் நோக்கம் சீரானதாக இருக்க வேண்டும். உயிர் என்றால் அது யாருடையது என்றாலும் பெறுமதியானதே.அது தாஜுதீனுடையதாக இருந்தாலும் சரி அழுத்கமையை சேர்ந்தவர்களுடையதாக இருந்தாலும் சரியே. அலுத்கமையில் கொல்லப்பட்டவர்கள் பற்றி இவ்வரசு சிறிதும் கவனம் செலுத்துவதாக இல்லை.இருந்த போதிலும் தாசுதீனின் கொலையை பெரிதாக தூக்கி பிடித்துள்ளது.

இதன் மூலம் இவ்வரசானது தாஜுதீனின் மரணத்தை இஒரு உயிர் என்ற நோக்கத்தில் விசாரணை செய்யவில்லை.அரசியல் லாபங்களுக்காகவே விசாரணை செய்கிறது.அளுத்கமை கலவரத்தில் கொல்லப்பட்ட இருவரின் கொலைக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் ஏதாவது சிறிது சம்பந்தம் இருந்திருந்தாலும் அதனை இவ்வரசு நிச்சயம் விசாரணை செய்திருக்கும்.

அலுத்கமை கலவரத்திற்கு ஞானசார தேரரும் அவரை ஏவிவிட்ட அணியும் காரணமாக இருப்பதால் அங்கு இடம்பெற்ற கொலைகளுக்கி காரணமாகவர்கள் யார் என்பதை அறிய விசாரணைகள் செய்யப்பட மாட்டாது.அதே நேரம் முன்னாள் ஜனாதிபதியுடன் ஒரு கொலைக்கான சிறு விடயம் சம்பந்தப்பட்டாலும் அதனை துருவி துருவி ஆராய்வார்கள்.இது தான் இந் நல்லாட்சியின் நீதியாகும்.(F)

joint opposition tamil media unit

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here