குற்றமிழைத்த ரவி கருணாநாயக்க மனைவி, மகளை காட்டிக்கொடுத்துள்ளார்-நாமல் ராஜபக்ஷ

0
266

ரவி கருணாநாயக்க குற்றமிழைத்து விட்டு தனது மனைவியையும் மகளையும் காட்டிக்கொடுத்துள்ளமை கவலைக்குறிய விடயமென ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார். அவர் தனியார் தொலைக்காட்சி அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக்குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

அலோசியசிடமிருந்து ரவி கருணாநாயக்க இலஞ்சம் பெற்றது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள ரவி கருணாநாயக்க தனது மனைவி மற்றும் மகள் ஆகியோர் மீது பழியை போட்டுத்தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.

உண்மையில் இது மிகவும் மோசமான செயற்பாடு. தன்னை காப்பாற்றிக்கொள்ள குடும்ப உறுப்பினர்களைக் காட்டிக்கொடுக்க அவர் முற்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குறிய விடயமாகுமென அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here