இந்தப்புழைப்பு தேவையா?

0
243

11540008(எச்.எம்.எம்.பர்ஸான்)
கட்டடத்தேவைகளுக்கு மண்ணை எவ்வாறு ஏற்றிச்செல்ல வேண்டும்? எப்படி ஏற்றிச்செல்ல வேண்டும்? என்ற நிபந்தனைகளெல்லாம் மிகத்தெளிவாகவும் கண்டிப்பாகவும் அரசாங்கத்தினால் சொல்லப்பட்டிருக்கிறது. அதனை அமுல்ப்படுத்துகின்றனரா என அவதானிக்க முழு அதிகாரமும் பொலிசாருக்கு வழங்கப்படுள்ளது.

ஆனால், அந்த நிபந்தனைகளையும் கட்டுப்பாட்டுக்களையும் மீறியவர்களாகத்தான் மண் அகழ்ந்து ஏற்றிச் செல்லும் அனுமதி பெற்ற பல முகவர்கள் நடந்து கொள்கின்றனர்.

குறிப்பாக, விடுமுறை தினங்களில் மண் ஏற்றுவதற்கு அனுமதிப்பத்திரம் இல்லாத போதும், அந்த சட்ட திட்டங்களை மீறி, மண் ஏற்றும் செயலில் ஈடுபட்டு வருவதை நாம் அவதானிக்க முடிகிறது.

இதனால் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறு சட்டவிரோதமாக மண்ணை ஏற்றி வரும் போது, பொலிஸார் மண் ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு முயற்சி செய்கின்ற போது, சாரதிகள் கட்டுப்பாட்டை மீறி மிக வேகமாக வீதி ஒழுங்கு விதிகளையும் மீறிச்செல்வதையும், கட்டுப்படாமல் செல்லும் உழவு இயந்திரங்களை துப்பாக்கி மூலம் உழவு இயந்திரங்களின் சில்லுகளுக்கு சுட்டு, அதனை சேதப்படுத்தி நிறுத்துவதையும் அனுபவ ரீதியாக காணக்கூடியதாகவுள்ளது.

இதன் காரணமாக பல விபத்துச்சம்பவங்கள் இடம்பெறுவதுடன், பாதையில் பயணிப்போர் உயிராபத்துக்களையும் எதிர்கொள்ள . இதற்கு உதாரணமாக அன்மையில் சட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தை நேரிடுகிறது.

அண்மையில் இவ்வாறு சட்டவிரோதமாக மண் ஏற்றி வந்த உழவு இயந்திரமொன்றை பொலிஸார் நிறுத்த முயற்சித்த போது, அதன் சாரதி நிறுத்தாமல் மிகவும் வேகமாக சன நடமாட்டமுள்ள பகுதியால் சென்ற போது, உழவு இயந்திரத்திற்கு துப்பாக்கிச்சூடு வைத்து நிறுத்தியமை நாமனைவரும் அறிந்த விடயம். இது போன்று இன்னும் ஏராளமான விடயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எனவே, இவ்வாறான செயல்களில் ஈடுபடும் போது, மனித உயிர்களைக்காவு கொள்ளும் சந்தர்ப்பங்களும் நிறையவேயுள்ளது. இவ்வாறான தொழில்களில் ஈடுபடும் நபர்கள் அரசாங்கத்தின் விதிமுறைகளை கனவத்திற்கொண்டு நடப்பதனால், பல பிரச்சினைகளிலும் சிக்கல்களிலுமிருந்து விடுபடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here