ஆளுமைமிக்க தலைமையைத்தேடும் கிண்ணியா

1
291

fgrgrgrகிண்ணியா ஐனுதீன்

கடந்த 28.07.2017ம்  திகதி முகநூலில் நான் பதிவு செய்த எனது  ஆக்கத்துக்கு  வந்த  பின்னூட்டங்களின்  அடிப்படையில் மக்களுக்கு  தெளிவுபடுத்தும்  நோக்கில்  இதை  எழுதுகின்றேன்.  முன்னைய  காலங்களை  விட தற்போது திருகோணமலை மாவட்ட  முஸ்லிங்கள்  காணும்   அபிவிருத்திகள்  அதிகம். ஆனால், மக்கள்  இன்னும்  தலைமைத்துவத்தைத்தான்  தேடிக்கொண்டடிருக்கின்றாா்கள் என்றால், எமது  தற்போதைய தலைமைகளின் அணுகுமுறைகள் மாற்றங்காண வேண்டுமென்பது புலனாகின்றதல்லவா?

அதாவது, அபிவிருத்தியை மையமாகக்கொண்டு மக்கள் மனதைக் கவர முடியாது. ஒழுங்கான ஆளுமை வேண்டும். பயங்காரவாதம்  தோற்க்கடிக்கப்பட்ட இக்காலத்தில் முஸ்லிம்கள்  பேரினவாதிகளினால் மிகவும் நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள காரணத்தினால், மக்களின் தேடல்கள் திசை மாற்றப்பட்டுள்ளது.

இதனால்  மக்கள்  அரசியல்வாதிகளை தங்களது  சமூகப்பாதுகாப்புக் கவசமாகப் பாா்க்கின்றாா்கள். தங்களது அன்றாட வாழ்க்கையில்  அரசியல் துணைகளின் பங்களிப்பைத் தேடுகின்றாா்கள். ஆனால், தலைவர்கள் எதிர்கால வரலாறுகள் பேசக்கூடிய  அபிவிருத்தியில்  கவனஞ்செலுத்துகின்றாா்கள். மக்களின் நிகழ்கால சிவில் நிர்வாகப்பிரச்சனைகளை கைவிடுகின்றாா்கள். இதனால் மக்கள் இன்னும்  தலைமையின்றித் தவிக்கும் நிலையில் திருகோணமலை முஸ்லிம்களின் நிலையுள்ளது.

காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் செய்யாத அபிவிருத்தியா? அக்கரைப்பற்றில் அத்தாவுல்லாஹ் அவர்கள் செய்யாத  அபிவிருத்தியா?  ஏன் அவர்களை மக்கள் தோற்கடித்தாா்கள்? அவர்கள் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைக் கை விட்டதனால் தான் கைவிடப்பட்டார்கள்.

அதே நேரம், றிஷாத் அவர்களை அந்த மக்கள்  தங்களது தலைவராக  ஏற்றுக்கொண்டது  மட்டுமல்லாமல், முழு இலங்கை முஸ்லிம்களும்  புகழும் ஒரு அரசியல்வாதியாக திகழக்காரணம் முஸ்லிம்களுக்கு ஏதும்  பிரச்சனையா? நேரடி  விவாதம். சிவில் நிருவாகத்தில்  பிரச்சனையா? உடன் உரிய அதிகாரிகளிடம்  பேச்சுவார்த்தை. சந்தர்ப்பத்துக்கு இமாமாக நின்று தொழுகை நாடாத்தனுமா?  அன்று  சம்மாந்துறையில் நின்று  தொழுகை நடாத்திக்காட்டினா்.

என சகல பிரச்சனைகளிலும் தலை நுழைத்து மக்களுக்கான  தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் முழு மூச்சாகத்திகழ்கின்றாா். இதையொரு  உதாரணத்துக்காகவே இங்கே குறிப்பிட்டேன். இதையும் கட்சிச்சாயம் பூசிவிடதீர்கள்.

தலைவர்  மர்ஹூம் அஷ்ரப்  அவர்கள், மக்களின்  பொதுவான அனைத்துப்பிரச்சனைகளையும் சட்டத்துக்குள் நின்று சாதித்துக்காட்டிய  சாதனை மன்னன். அதனால் தான், அம்பாறை மக்கள் மட்டுமல்ல. முழு இலங்கை வாழ் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் மரணித்தும்   வாழ்கின்றாா்.

அதே போல், 2004ம் ஆண்டு  ஒரு இலட்சத்துக்கும் மேல் கம்பஹா மாவட்டத்தில் வாக்குகளைப் பெற்ற அஞ்சான் உம்மா 2012ம் ஆண்டு 4000 வாக்குகளையே பெற்றாா். காரணம் குறிப்பிடும்படியான ஆளுமையில்லை. அதே போல், மஹிந்தாவை மக்கள் இன்னும்  நேசிக்கின்றனர். மக்களின் அன்றாடப் பிரச்சனைகளில் நேரடியாகத் தலையிட்டுத் தீர்ப்பதில் மஹிந்த கெட்டிக்காரன். மேலும், ஏ.சி.எஸ்.ஹமீட் அவர்களை ஏற்றுக்கொண்ட மக்கள், காதர் ஹாஜியாரை ஏற்றுக்கொள்ளவில்லை. இங்கும் மக்களின் பிரச்சனைகளுக்கு  தீர்வுகள் கண்டது தான் காரணம்.

கிண்ணியாவைப்  பொறுத்த வரை எமது  வியாபாரம் பறி போகின்றது. இதுவரையும்  எந்தத்தலைவனும் ஏனென்று கூடக்கேட்கவில்லை.  கடலில் மீன்பிடிப்பிரச்சனை எமக்கிருப்பது போல், சிங்களவர்களுக்கில்லை. காட்டுத்தொழிலுக்கு நாங்கள் செல்ல முடியாது. எமது  எல்லைக்குள் அல்லைப்பகுதி, வான்எலெ சிங்களவர்கள் தாராளமாக தங்கள் தொழிலைச் செய்கின்றாா்கள்.

அவர்களை சட்டம்  தண்டிக்க  முற்படும் போது, அவர்களின் மக்கள் பிரதிநிதிகள், தலைவர்கள் தலையிட்டு, சட்டத்தையும் வென்று விடுகின்றனர்.

அனைத்துப் பொது சிவில் பிரச்சனைகளிலும் சிங்களத்தலைமைகள் மக்களுடன்  தோளோடு தோள் நின்று உழைப்பதனால் எமது  மாவட்டத்தில் தமிழர்களும் சிங்களவர்களும் தங்கள்  தலைமையைத்தேடவில்லை. நாங்கள்  மட்டும் தான் அபிவிருத்தியின்   உச்ச கட்டத்திலிருந்தும் இன்று வரைக்கும் தலைமைகளை விமர்சித்த வண்ணமுள்ளோம்.

அபிவிருத்தியென்பது ஒரு சமூகத்துக்கு இன்றியமையாதவொன்று. இருந்தும், மக்கள் மத்தியில் இடம்பிடிக்க ஆளுமை  வேண்டும்.   நாங்கள் அவன்  கூடாது. இவன்  கூடாது  என்று  சொல்லிச்சொல்லி, ஒருவரைத் தோற்கடித்து, ஒருவரை வெல்ல வைத்து, இப்படியே காலத்தை ஓட்டுகின்றோம்.

அந்த இடைவெளியில் எமது அனைத்து உரிமைகளும் பறிப்போய்க் கொண்டிருக்கின்றது. ஏன் நம்மில் ஒரு துணிச்சல்மிக்க நல்லவனை  இனங்காண முடியாது? அல்லது இருக்கும் தலைமைகளிடம் எமது சமூகத்தின் பிரச்சனைகளை முன் வைத்து தீர்வு கண்டு தருவோருக்கு   மீண்டும் கைகொடுப்போம் என துணிச்சல் கண்டிசன்  போட முடியாது?

ஆகவே, எல்லாவற்றுக்கும்  தீர்வுகளுண்டு. அதை எமது  இளைஞர்கள் தேட வேண்டும். நல்ல கட்டமைப்பிலிருந்து முயற்சி செய்யுங்கள்  . வெற்றி நிச்சயம்.

நன்றி,
ஐனுதீன்
கிண்ணியா.

1 COMMENT

  1. அல்லாஹவுக்கு பயந்த சுயனலம் இல்லாத ஒரு ஆளுமை மிக்க தலைவன் வோண்டும் நீங்கள் தெடர்ச்சியா எழுதுங்கள் இன்ஷா அல்லாஹ் இளஞ்சர்கள் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் நிச்சயம் ஒரு தலைவனை உருவாக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here