கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளரின் தீர்மானத்துக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

0
289

18700197_1761953084135512_4703351224909585148_nரி.தர்மேந்திரன்

கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குட்பட்ட அலுவலகங்களில் கடமையாற்றுகின்ற ஊழியர்களின் நிதி சம்பந்தப்பட்ட விடயங்கள் மட்டக்களப்பிலுள்ள மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனைக்கு மாற்றப்படுவதை ஆட்சேபித்து தொழிற்சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இவ்வூழியர்களின் விடயங்களை அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள பிராந்திய அலுவலங்களே நேரடியாகக் கையாண்டு வருகின்றன. இவ்வேற்பாடு உண்மையில் ஊழியர்களுக்கு வசதியானதாகவுள்ளது. மேலும், அதிகாரம் ஒரு இடத்தில் குவிக்கப்படாமல் பன்முகப்படுத்தப்பட்டிருப்பது வாய்ப்பானதாகவும் உள்ளது.

ஆனால், இப்பிராந்திய அலுவலகங்களிடமிருந்து ஊழியர்களின் நிதி சம்பந்தப்பட்ட விடயங்களை எடுத்து மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனைக்கு கொடுக்க கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் ( நிதி ) தீர்மானித்துள்ளார். இதை ஆட்சேபித்து அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம், இலங்கை அரசாங்க பொது சேவைகள் ஆகியன கிழக்கு மாகாணத்தின் ஆளுனர், முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளன.

இந்நிலையில், தொழிற்சங்கப்பிரதிநிதிகளுடன் மேற்படி விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பிரதி பிரதம செயலாளர் ( நிதி ) அழைப்பு விடுத்துள்ளார் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மாகாண நீர்ப்பாசனப் பணிமனைக்கு ஊழியர்களின் நிதி சம்பந்தப்பட்ட விடயங்களை கையளிக்கின்ற தீர்மானத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று இப்பேச்சுவார்த்தையில் வலியுறுத்துவார்கள் என்றும் இத்தீர்வு எட்டப்படாத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தவிர வேறு மார்க்கம் இருக்கப்போவதில்லை என்றும் இவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here