பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் காத்தான்குடி சுகாதார பொதுப்பரிசோதக நிலையக் கட்டடத்திற்கு நிதியொதுக்கீடு

0
175

HRS_3917எம்.ரி.ஹைதர் அலி

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி சுகாதார பொதுப்பரிசோதக நிலையக் கட்டத்திற்கான மேல்த்தள வேலைகள்  அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதற்கென கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சினூடக  சுமார் 88 இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, விரைவில் இவ்விரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனூடாக காத்தான்குடி பொதுச்சுகாதார வைத்திய நிலையத்தின் பணிகளை மேலும் விஸ்தரிக்கவும், வினைத்திறனான சேவையினை மக்களுக்கு வழங்கவும் முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மையில் காத்தான்குடி சுகாதார பொதுப்பரிசோதக நிலையத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள், நிர்மாணிக்கப்படவுள்ள கட்டட மேல் தளத்தினைப் பார்வையிட்டதோடு, பொதுச்சுகாதார வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் நசுருதீன் அவர்களைச் சந்தித்து மேற்கொள்ளப்படவுள்ள இவ்வபிவிருத்திப்பணிகள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வைத்திய நிலையத்தின் மேலதிகத் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.HRS_3883 HRS_3886 HRS_3902 HRS_3905 HRS_3915 HRS_3917 HRS_3926

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here