மாத்தறை நீர் வழங்கல் திட்ட 4ஆம் கட்டம் அமைச்சர் ரவூப் ஹக்கீமால் ஆரம்பம்

0
285

IMG-20170806-WA0036பிறவ்ஸ்

மாத்தறை நீர் வழங்கல் திட்டத்தின் 4ஆம் கட்ட செயற்றிட்டத்துக்கான ஆரம்ப வேலைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இன்று (06) ஆரம்பித்து வைத்தார்.

இத்திட்டத்தினால் நாளொன்றுக்கு 60,000 கன மீற்றர் நீர் வழங்குவதன் மூலம் மாத்தறை, திஹகொட தெவிநுவர, திக்வெல்ல, வெலிகம, வெலிபிட்டிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, கிரிந்த, அதுரலிய, பெலியத்த, தங்கல்லை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 284,808 பேர் நன்மையடையவுள்ளனர்.

இலங்கை மக்களின் பாதுகாப்புமிக்க குடிநீர்த் தேவையைப் பூா்த்தி செய்வதன் பொருட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தேசிய அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ், நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் வழிநடாத்தலில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

சிறுநீரக நோய்க்கெதிராக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டத்தின் கீழ் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 18,208  மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இத்திட்டம் இன்னும் 3 வருடங்களின் பின்னர் நிறைவுபெறும்.

இதன் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெணான்டே புள்ளே, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.IMG-20170806-WA0035 IMG-20170806-WA0036 IMG-20170806-WA0037 IMG-20170806-WA0038

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here