மாணவர்களுக்கு கல்வியுடன் விளையாட்டுத்துறையிலும் ஈடுபட வைப்பது பெற்றோர்களின் கடமையாகும் – அமைச்சர் நஸீர்

0
241

received_1316009228496801சப்னி அஹமட்-

மாணவர்களுக்கு கல்வியுடன் இணைந்து விளையாட்டிலும் ஈடுபட வைப்பது பெற்றோர்களின் கடமையாகும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ரெயின்போவ் கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி (கலர்ஸ் டேய்) இன்று (06) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தஙகளது கல்விச்செயற்பாட்டில் மாத்திரம் ஈடுபடுவதையிட்டு மாணவர்களை விளையாட்டுத்துறையிலும் ஈடுபடவைப்பதன் மூலம் மாணவர்களின் மூளை வளர்சிக்கு பெரும் பங்கற்றும்.

அது போல் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் செய்வதற்காக எம்மால் ஏன்ற உதவிகளை வழங்குவதற்கு நாம் முயற்சி செய்கின்றோம்.

இதன் போதுtv, கல்லூரியின் வளர்ச்சிக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீரினால் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 01 இலட்சம் ரூபாவினை கல்வி வளர்சிக்கு உதவியமைக்கு கல்லூரி நிருவாகத்தினரால் நன்றியினையும் தெரிவித்துக்கொண்டனர்.

இதன் போது தங்களது திறமைகளை வெளிக்கொண்ட மாணவர்களுக்கு கிண்ணங்களை வழங்கி அமைச்சர் கெளரவித்தார்.received_1316009228496801 received_1316009318496792 received_1316009408496783

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here