றியாழின் சேவைகளை தனது சேவையாகக் காட்ட முயலும் முதலமைச்சர்

0
289

IMG-20170805-WA0050துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை

கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமத், கல்குடாவில் கல்குடாத்தொகுதி அமைப்பாளரான றியாழினால் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் கொண்டு வரப்படும் சேவைகளை தனது சேவைகளாகக் காட்ட முற்படுவதாக றியாழின் ஆதரவாளர்கள் அதிருப்தி வெளியிடுவதை அவதானிக்க முடிகிறது.

எதிர் வரும் 13ம் திகதி கல்குடா அபிவிருத்தித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சரினூடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் றியாழை ஒரு பொருட்டாகவே கொள்ளாமல் செய்தி வெளியிட்டுள்ளது. இதிலுள்ள பல சேவைகள் றியாழின் முயற்சியினால் கொண்டு வரப்படுபவைகள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்தி வெளியிடுகையில் அவர் இச்சேவைகளைக் கொண்டு வந்தார் என்றில்லாமால், கல்குடாத்தொகுதி அமைப்பாளர் என்ற வகையிலாவது அவரைக் கௌரவப்படுத்தியிருக்கலாம். ஒரு தொகுதியினுள் நுழைவதானால் அத்தொகுதியின் அமைப்பாளரின் அனுமதியுடன் அவரையும் அழைத்துச் செல்வதே ஒரு கட்சிக்கான பண்பாகும்.

ஒருவர் ஒரு வீட்டைக்கட்டி இன்னுமொருவருக்கு வழங்குகின்றார். குறித்த கட்டிக்கொடுத்த நபர் குறித்த வீட்டினுள் நுழைவதானால் கூட அந்த வீடு வழங்கப்பட்டவரின் அனுமதியோடு வழங்குவதே மரியாதையாகும்.  கிழக்கு முதலமைச்சரினால் கல்குடாவில் நடாத்தப்படும் எந்த நிகழ்வுக்கும் றியாழ் அழைக்கப்படுவதில்லை.

அண்மையில் குடிநீர் வழங்கும் இரண்டாம் திட்டத்தின் போது பிரதே சபைக்கூட்டத்திற்கென நபர்கள் அழைக்கப்பட்டு உடனடியாக குழாய் பதித்தும் சென்றிருந்தார். இதில் 12km குடிநீர் வழங்கும் திட்டம் றியாழின் விசேட வேண்டுகோளின் பேரில் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு முதலமைச்சரைப் பொறுத்தமட்டில் தனது கட்சிக்கு வழங்கும் முக்கியத்துவத்தை விட தனது தனிப்பட்ட செல்வாக்கைக் கட்டியெழுப்புவதிலேயே அதிகம் அக்கறை காட்டி வருகிறார். மீண்டும் தலைமைத்துவ ஆசை வந்து விட்டதோ என்னவோ? அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட ஏறாவூரில் இடம்பெற்ற அபிவிருத்தி நிகழ்வில் மு.காவின் தலைவரையே ஒரு பொருட்டாகக் கொள்ளாமை குறிப்பிடத்தக்கது.

இவர் முதலமைச்சர் என்ற அந்தஸ்திலிருப்பதனாலேயே இவர் அழைக்க பிரதமர் வருகிறார். இந்த முதலமைச்சு மு.காவினால் தான் வழங்கப்பட்டதென்பதை அவர் மறந்து விட்டார். அதனோடு ஒப்பிடுகையில், இது ஒரு பெரிய விடயமுமல்ல.  இவரின் செயற்பாடு காரணமாக ஏறாவூரைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாகிர் மௌலானா மு.காவிலிருந்து விலகிச்செல்லச் சிந்திப்பதாகவும் அறிய முடிகிறது. அது மாத்திரமின்றி பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரிடமும் திறப்பு விழாக்களில் இவர் முரண்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருந்த போதிலும், இவரின் விடயத்தில் அமைச்சர் ஹக்கீம் மிகவும் மென்மையான போக்கையே கடைப்பிடிக்கின்றார். இவருக்கு இத்தகை எதேச்சதிகாரம் எதனால் என்ற வினாவுக்கான விடை மிக நீண்டதென்பதால் அதனை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்பவில்லை.20643732_847879232046537_1594496540_n 20643927_847879168713210_1252855980_n 20645635_847879238713203_568264808_n 20645780_847879165379877_1524178253_n 20645889_847879288713198_1319772547_n 20668135_847879352046525_992206021_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here