உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்-பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

0
297

Shibly Farookஎம்.ரி.ஹைதர் அலி

நாளை 2017.08.08 – செவ்வாய்க்கிழமை கல்விப் பொதுத்தராதர உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைய தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் விடுத்துள்ள உயர் தர மாணவர்களுக்கான வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாளை ஆரம்பமாகவுள்ள உயர் தரப்பரீட்சையானது ஒவ்வொரு மாணவர்களின் வாழ்விலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவொரு கட்டமாகும். மேலும், இப்பரீட்சையானது மாணவர்களுக்கு மாத்திரமன்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அவர்கள் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்குமான ஒரு முக்கிய தருணமாக அமையவுள்ளது.

எனவே, மாணவர்கள் இப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதனூடாக தமக்கான வெற்றிகரமான எதிர்காலமொன்றினை அமைத்துக்கொள்வதோடு, சமூகத்திற்கு பயனளிக்கக்கூடிய நற்பிரஜைகளாகவும் உருவாக வேண்டும்.

மேலும், ஒவ்வொரு மாணவர்களுக்கும் தங்களது எதிர்காலம் தொடர்பாக பல்வேறு வகையான திட்டமிடல்கள் உள்ள போதிலும், இப்பரீட்சைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி மூன்று பாடங்களிலும் 3A சித்தியினைப் பெறுவதனை மையமாகக்கொண்டு செயற்பட வேண்டும்.

அதனூடாக மாணவர்களுக்கு 3A சித்தியினைப் பெற்று தங்களுக்கான பல்கலைக்கழக வாய்ப்புக்கள் கிடைக்காத ஒரு நிலை ஏற்பட்டால் கூட தங்களுடைய சிறந்த பெறுபேறுகளைக்கொண்டு சிறந்த எதிர்காலத்தினை அமைத்துக்கொள்வதற்கான பல்வேறு வாய்ப்புக்களை தங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே, நாளை நடைபெறவுள்ள உயர் தரப்பரீட்சையினை எவ்வித பதற்றமுமின்றி மிகவும் நிதானமான முறையில் எதிர்கொண்டு சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதனூடாக எமது சமூகம் எதிர்கால கல்விச்சமூகமாக மாற்றமடைய பிரார்த்திக்கின்றேன் என தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here