கல்குடா பிரதேசத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இடங்களுக்கு கள விஜயம்

0
178

received_1604028406336363(ஆதிப் அஹமட்)

நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13.08.2017) கல்குடா பிரதேசத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்  ஆரம்பித்து வைக்கப்படவுள்ள பல்வேறு இடங்களுக்கு நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் மற்றும் கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் கணக்காளர்.எச்.எம்.எம்.றியாழ் ஆகியோரின் தலைமையிலான குழுவினர் இன்று(07.08.2017) கள விஜயம் செய்து பார்வையிட்டனர்.

இதன் போது ஓட்டமாவடி, காவத்தமுனை, தியாவெட்டுவான், வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை, பதுரியா நகர் மற்றும் மாஞ்சோலை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கு அவர்கள் விஜயம் செய்தனர்.

இவ்விஜயத்தின் போது முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் முஹாஜிரீன் ஆசிரியர், சமூக சேவையாளர் ஹனீபா YSO, அமைப்பாளர் றியாழின் செயலாளர் றபீக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாட்டாளர் யாஸிர் அறபாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.received_1604028923002978 received_1604028613003009 received_1604028406336363 received_1604027803003090 received_1604027523003118

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here