ஊடகவியலாளர் ஏ.டி.எம்.பஸ்லியின் மறைவுக்கு டொகடர் ஷாபி அனுதாபம்

0
297

Untitled-1முஹம்மது நிஜாம்
நேற்று 7.8.2016ம் திகதி திங்கட்கிழமை காலை வபாத்தான அறிவிப்பாளர் ஏ.டி.எம்.பஸ்லி அவர்களின் மறைவுக்கு எனதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற வேட்பாளர் டொகடர் ஷாபி சிஹாப்தீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,

எங்களை விட்டுப்பிரிந்த ஊடகவியலாளர் அறிவிப்பாளர் சகோதரர் ஏ.டி.எம்.பஸ்லி மிகவும் எழிமையாக நம்மிடையே வாழ்ந்த ஒருவராகும். அவர் மெடிகெ மிதியாலையைச் சேர்ந்த ஒருவராக இருந்த போதிலும் கூட, அறிவிப்பாளர் மற்றும் ஊடகவியலாளர் என்ற ரீதியில் இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களுடன் நெருக்கமான தொடர்பை வைத்திருந்ததுடன், முஸ்லிம் ஊடகவியலாளர்களின் நலன்களிலும் அக்கறை காட்டினார்.

அவருக்கு அரசியல் ரீதியாக பல சவால்கள் ஏற்பட்ட போதெல்லாம், எம்முடன் ஒற்றுமையாகவும் அன்பாகவும் இருந்து கடந்த காலங்ளில் என்னுடைய அரசியல் வளர்ச்சிக்காகவும் அதன் உயர்வுக்காகவும் மறைந்த சகோதரர் ஊடகவியலாளர் அறிவிப்பாளர் ஏ.டி.எம்.பஸ்லி பாடுபட்டார்.

சகோதர இனத்தைச்சேர்ந்த ஊடகவியலாளர்களுடனும் நெருக்கமான உறவை மர்ஹூம் அறிவிப்பாளர் ஏ.டி.எம்.பஸ்லி பேணி வந்தார். இந்நிலையில் அவர் வபாத்தான செய்தி எங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக எனப் பிராத்திக்கின்றேன் என குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற வேட்பாளர் டொகடர் ஷாபி சிஹாப்தீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி
இவ்வண்ணம்.
டொகடர் ஷாபி சிஹாப்தீன்
குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here