உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஏ.எம்.ஜெமீல் வாழ்த்து

0
196
Untitled-1முக்தார் அஹ்மத்
இன்று 08.08.2017ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் க.பொ.த உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் பரீட்சைகளுக்கு முகங்கொடுத்து சிறந்த பெறுபேறுகளைப் பெற வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச்செய்தி மேலும் தெரிவித்திருப்பதாவது,
கடந்த இரு வருடங்களாக உயர்தரத்தில் கற்ற கல்விக்கான பலனை இன்றைய பரீட்சைகள் தான் தீர்மானிக்கப் போகின்றன. பரீட்சை பெறுபேறுகளிலேயே தான் நமது எதிர்காலமும் தங்கியுள்ளது. இவைகளைக் கருத்திற்கொண்டு திறம்பட பரீட்சைகளுக்கு முகங்கொடுத்து சித்தி பெற்று நற்பிரஜைகளாக மிளிர எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக தான் விடுத்துள்ள வாழ்த்தில் மேலும் தெரவித்துள்ளார். Untitled-1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here