கல்குடா மஜ்லிஸ் ஷூராவினால் நோயாளிக்கு உதவித்தொகை வழங்கல்

0
222

எச்.எம்.எம்.இத்ரீஸ் (ஊடகப்பிரிவு-கல்குடா மஜ்லிஸ் ஷூரா)

கல்குடாவில் பல்வேறு சமூக, சமய நலப்பணிகளை மேற்கொண்டு வரும் கல்குடா மஜ்லிஸ் ஷூரா தனது பணித்தொடரில் நிரந்தர நோயாளிக்கு உதவும் நோக்கில் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஹைராத் வீதி, அல்ஹக் குறுக்கு வீதியில் வசிக்கும் அலாப்தீன் என்பவரின் நலன் விசாரித்து அவருக்கு உதவும் நோக்கில் ஒரு தொகைப்பணத்தினையும் வழங்கி வைத்தது.

நேற்று 07.08.2017ம் திகதி திங்கட்கிழமை அவரது வீட்டுக்கு நேரில் சென்ற கல்குடா மஜ்லிஸ் ஷூரா சபை தலைவர் தலைமையிலான குழுவினர் அவருக்காகப் பிரார்த்தனை புரிந்ததுடன், அவருக்கான உதவித்தொகையினையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இவவிஜயத்தில், கல்குடா மஜ்லிஸ் ஷூராவின் தலைவர் அஷ்ஷெய்க் ஹாமி சதக்கா, செயலாளர் எம்.எம்.ஜுனைத், பொருளாளர் நிஷார் ஹாஜி, கல்குடா மஜ்லிஸ் ஷூராவின் உயர் சபை உறுப்பினர்களான உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஐ.எம்.றியாஸ், நியாஸ்தீன் ஹாஜி, அஸீஸ் ஹாஜி, எம்.ரஷீத் ஹாஜி, மஜ்லிஸ் ஷூராவின் ஊடக இணைப்பாளர் எச்.எம்.எம்.இத்ரீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.sgs

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here