எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-வாழைச்சேனை
விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சின் கீழியங்கும் இலங்கை புத்தாக்க ஆணைக்குழு நடாத்திய இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியில் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் மாணவர் மீராமுஹைதீன் யூனுஸ்கான் அரச அனுசரணையில் கொரியாவுக்கு புறப்பட்டுச்செல்லுமுன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது அமைச்சில் சென்று சந்தித்த போது, அவரது திறமையைப் பாராட்டி, நன்கொடையும் வழங்கினார்.
விவசாயத்திற்குப் பயன்படும் விதை நெல் தூவுதல், பசளை இடுதல், கிருமிநாசினி தெளித்தல் ஆகியவற்றைச் செயற்படுத்தக்கூடிய கருவியொன்றைக் கண்டுபிடித்ததனால் யூனுஸ்கானுக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது.
இதன் போது, முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான யூ.எல். எம்.என்.முபீன், அமைச்சரின் கல்குடா இணைப்பாளர் ஏ.எல்.எம். பாரூக் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.