மீராவோடை காணிப்பிரச்சினைக்குத்தீர்வு காண சட்ட ரீதியாக ஒத்துழைப்பு வழங்க கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா சபை தயார்-தலைவர் சட்டத்தரணி ஈ.சகாப்தீன்

0
243

19059531_482762435398133_5056412111004072943_n(ஓட்டமாவடி செய்தியாளர் அ.ச.முகம்மது சதீக்)
மீராவோடை தமிழ் சக்தி வித்தியாலத்தினால் அண்மையில் விளையாட்டு மைதானத்தை விஸ்தரிப்புச் செய்வதற்காக அதன் அண்மையிலுள்ள காணிகளை சட்ட ரீதியற்ற முறையில் சுவீகரிப்பதற்காகப் போராட்டங்களை முன்னெடுத்தது. இதில் முஸ்லிம்களின் காணிகள் இல்லாமல் போகும் அபாயமுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா  சபை இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் இடத்திற்குச்சென்று பார்வையிட்டது. இதில் கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா  சபையின் தலைவர் சட்டத்தரணி ஈ.சகாப்தீன் அவர்களால் இக்காணிகளின் ஆவணங்களைப் பரீசிலனை செய்யப்பட்டு, எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கையின் பின்னர் இக்காணிகளை மீட்டெடுப்பதற்காக முயற்சிகளை ஈடுபடுவதாகக் கூறியதோடு, பொது மக்கள் யாரும் வன்முறைகளில் ஈடுபட வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

இதில், கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா சபை உறுப்பினர்களால் ஆவனங்கள் தொடர்பாகவும் எமது மக்களுடைய இருப்புத்தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அங்கு கருத்துத்தெரிவித்த மீரா லெப்பை வயது 72 என்பவர், எமது காணியின் ஆவணங்கள் சில எங்களிடம் உள்ளது. யுத்த காலத்தில் இவ்விடத்தை இந்திய சமாதானப்படையினர் முகாமிட்டிருந்தனர். அதன் பின்னர் எங்களது இடத்தை இலங்கை இராணுவம் காவலரண்கள் அமைத்திருந்தனர்.

நாங்கள் எங்களது இடத்தை விட்டு எங்களது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றிருந்தோம். அகதியாக வேறு மாவட்டங்களுக்குச் சென்றிருந்தோம். இலங்கை அரசாங்கம் 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் மீள்குடியேறுமாறு செய்திகள் வாயிலாக அறிந்து, எமது வழமையான இடத்துக்கு வந்து குடியமர்ந்து வழமை போன்று செய்து வந்த சேனைப்பயிரச்செய்கை, ஓடாவித்தொழில்கள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றோம் என்று தெரிவித்தார்.

ஆதனைத்தொடர்ந்து அங்கு கருத்துத்தெரிவித்தவர்கள் எமது மற்ற இனச்சகோதரர்கள் எமது இடங்களை அடிக்கடி சேதப்படுத்துவதாகவும், இப்பிரதேசம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது. எமக்கு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் மாஞ்சோலைப் பிரதேசத்துக்குப் பொறுப்பான கிராம சேவையாளர்களான காலஞ்சென்ற ஈசா லெப்பை விதானையானர், விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்ட புஹாரி விதானையானர் மற்றும் தற்போது இளைப்பாறிச் சென்ற ஆதம்லெப்பை விதானையானர் ஆகியோர் இவ்விடத்தில் தங்களது சேவைகளைச் செய்ததாகக் கூறினார்.

கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா சபையின் மூத்த உறுப்பினர் யூ.எல் மஹ்மூத் அவர்கள் கூறுகையில், எமது பிரதேசத்தில் மக்களின் சனத்தொகை அடர்த்தி அதிகமாகவுள்ளதனால் அதற்கான காணிகள் இல்லாமையால் எமக்கு பல நோய்கள் வருவதாகவும், எமது பிரதேசதவாசிகள் இழக்கப்பட்ட காணிகளை மீட்டெடுப்பதற்காக எமது கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா  சபையானது என்றும் ஒத்துழைப்பு வழங்கும் என்று குறிப்பிட்டார்.

அதன் பின்னர் மீராவோடை தமிழ்  சக்தி வித்தியாலயத்தின் சட்ட விரோத காணி சுவீகரிப்பு முயற்சி சம்பந்தமான விடயம் தொடர்பில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா அவர்களை கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா சபை சந்தித்து அவர்களின் ஆதங்கங்களை முன்வைத்தனர்.

அங்கு கருத்துத்தெரிவித்த கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா சபையின் தலைவர் சட்டத்தரணி ஈ.சகாப்தீன் அவர்கள், அக்காணிகளின் ஆவணங்களைப் பரிசீலனை செய்ததாகவும், அவ்விடயம் தொடர்பான சட்ட ரீதியான விடயத்தில் கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா சபையினர் பூரண பங்களிப்புச் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் அங்கு கருத்துத்தெரிவித்த கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா  சபையின் செயலாளர் எம். ஜ.ஹாமித் மௌலவி அவர்கள், எமது நிர்வாக எல்லைக்குள் கோறளைப்பற்று பிரதேச செயலகம் அத்துமீறி வருவதற்கு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்துத்தெரிவித்த கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, இக்காணி விடயமாக முறவோடை சக்தி வித்தியாலயத்தினால் நடாத்தப்பட்ட போராட்டங்களை தான் அறிவேன் என்றும், மக்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க நிர்வாக, சட்ட ரீதியாக நடவடிக்கையெடுத்து வருவதாகவும் கூறினார்.DSC03903 DSC03911 DSC03913 DSC03914 IMG_20170807_171018 IMG_20170807_172946 IMG_20170807_192745

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here