தனிச் சிறப்போடு தன் பணியை ஆற்றிவந்தவர்தான் மர்ஹும் பஸ்லி – முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர்.

0
240

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

uuuuவளரும் பயிரை முளையிலே கிள்ளி எறியப்பட்ட, மனதை உறுத்தும் ஒரு செய்திதான் இளம் ஊடகவியலாளர் எம்.ரி.எம். பஸ்லியுடைய மறைவுச் செய்தியாகும் என முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

இளம் ஊடகவியலாளர் எம்.ரி.எம்.பஸ்லியின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மலர் விரிந்து மணம் பரப்பும் வேளையில் அவர் மறைவு எமக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ந்து வருகின்ற ஊடகவியலாளர்களில் தனிச் சிறப்போடு தன் பணியை ஆற்றிவந்தவர்தான் மர்ஹும் பஸ்லி. இன்று இப்படியான ஊடகவியலாளர்கள், வானொலிக் கலைஞர்கள் திறமை மிக்கவர்கள் அதிலும் இறையச்சம் கொண்டவர்கள் எமக்கு ஏராளமாகத் தேவைப்படுகின்றார்கள்.

எனவே அவருடைய பிரிவால் துயருறும் குடும்பத்தவர்களுக்கும் உற்றார், உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் கபுரை ஒளிமயமாக்கி, அவருடைய அனைத்துச் சேவைகளையும் கபூல் செய்து அதற்கு சிறந்த பகரமாக ஜென்னத்துல் பிர்தௌஸை வழங்கி அருள் புரிவானாக!(F)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here