எம்மை திருடர்களாக சித்தரித்தவர்களே உண்மையான திருடர்கள் ; ஜோன்ஸ்டன்

0
173

[UNSET]ரவி கருணாநாயக்கவின் ஊழலை மூன்று மாதங்களில் விசாரணை செய்து வெளிப்படுத்த முடியும் என்றால் கூட்டு எதிர்கட்சி செய்ததாக நல்லாட்சியாளர்கள் கூறும் ஊழல் தொடர்பில் ஏன் விசாரணைகளை நிறைவு செய்யமுடியவில்லை என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் இன்று நீதிமன்ற அலுவல் ஒன்றுக்காக நீதிமன்றிற்கு விஜயம் செய்த போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்..

ரவி கருணாநாயக்கவின் ஊழலை மூன்று மாதங்களில் விசாரணை செய்து வெளிப்படுத்த முடியும் என்றால் கூட்டு எதிர்கட்சி செய்ததாக நல்லாட்சியாளர்கள் கூறும் ஊழல் தொடர்பில் ஏன் விசாரணைகளை நிறைவு செய்யமுடியவில்லை.இதன் பின்னணியில் அரசியல் சேறு பூசும் நடவடிக்கைகளே உள்ளன.

எம்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி எம்மீது சேறு பூசும் அரசியலையே இவர்கள் முன்னெடுக்கிறார்கள். இவை அனைத்தும் அரசியல் நாடகம் எம்மை திருடர்களாக சித்தரித்தவர்களே உண்மையான திருடர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.(F)

joint opposition tamil media unit

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here