ஹஜ் பயணமும் நாம் விடும் தவறுகளும்-ஷியான் யாக்கூப்

0
469

deeeeபல இலட்சங்கள் செலவு செய்து அல்லாஹ்வின் பொருத்தத்தினை நாடி ஹஜ் கடமையினை நிறைவேற்றப்போகும் நாம் கணக்கிலெடுக்காது விடுகின்ற சில பொதுவான தவறுகள் இருக்கின்றன.

1) எம்மில் அதிகமான சகோதரர்கள் மதீனாவிற்குச்செல்லும் போது கப்று வணக்கத்தில் ஈடுபடுதல். இவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்தினை அண்மிக்கும் போது, அல்லாஹ்வினை மறந்து நபிகளாரிடம் பிராத்தனை செய்கின்றனர். இது அவர்களின் ஹஜ்ஜினையும் பெறுமதியற்றதாக்குவதுடன், அவர்களை புனித இஸ்லாத்தினை விட்டும் வெளியேற்றி விடுகின்றது.

நீங்கள் மஸ்ஜிதுன் நபவியினை அடைந்தால் அங்கும் அல்லாஹ் தான் நீங்கள் பிரார்த்தனை செய்வதற்குத் தகுதியானவன் என்பதை மறந்து விடாதீர்கள்.

2) மீகாத் என்ற இடத்தினை இஹ்ராம் உடுத்தாமல் தாண்டக்கூடாது. நாம் ஜித்தா விமான நிலையத்தினை அடைந்ததும் அங்கிருந்து நேரடியாக மக்காவினுள் நுழைய வேண்டியேற்படும். ஆனால், ஜித்தா விமான நிலையமானது, “மீகாத்” இன் எல்லைக்குட்பகுதியிலுள்ளது என்பதை மறக்க வேன்டாம். எனவே, நீங்கள் விமானத்திலிருந்து தரையிறங்கும் முன்பே இஹ்ராம் உடுத்தியிருக்க வேன்டும்.

3) தடையற்றதாயினும் இஹ்ராம் உடையுடன் போட்டோ எடுப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் செல்வது உங்கள் இறைவனை வழிபடுவதற்காக மாத்திரமே. மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காக இஹ்ராம் உடையுடன் நீங்கள் அனைத்து இடங்களிலும் போட்டோ எடுப்பதென்பது சதா இறைவனினை நினைத்துச்செய்ய வேண்டிய ஹஜ்ஜில் உங்கள் பொறுப்பணர்ச்சியினைப் பாதித்து விடுகின்றது.

4) நீங்கள் கஃபாவினை அடைந்து தவாப் செய்ய ஆரம்பிக்கும் வரை உங்கள் வலது தோள் பட்டைப்பகுதியை திறக்காதீர்கள். ஏனென்றால், அவ்விடத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் அதைச்செய்திருக்கின்றார்கள். அதை பின் தொடர்வது நம் கடமையாகும்.

5) நீங்கள் ஹஜ்ஜின் போது கட்டாயம் சான்ட்ல்ஸ்  (Sandals) இனையே பாதணியாக அணிந்து கொள்ளுங்கள். உங்களிடம் சான்ட்ல்ஸ் இல்லையென்றால், அதைப்பெற்றுக்கொள்ளும் வரை உங்களிடமுள்ள பாதணிகளை தற்காலிகமாக அணிந்து கொள்ளுங்கள். உங்களால் வெறும் காலுடன் நடக்க முடியாது.

6)”லெப்பைக் அல்லாஹும்ம லெப்பைக்..” என்று நீங்கள் நீங்கள் சொல்கின்ற போது, வாயினால் மட்டும் அதை மொழியாமல் ஒவ்வொரு தடவையும் முழுக்கவனமெடுத்துச் சொல்லுங்கள்.

கஃபாவினை தவாப்செய்யும் போது துஆ புத்தகங்களை மனனம் செய்து கொண்டோ அல்லது துஆப்புத்தகங்களுடனோ இறைவனிடத்தில் துஆக்கேட்காதீர்கள். குர்ஆனினை வாசித்து உங்கள் உள்ளங்களிலிருந்து அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.

மேலும் தவாப் செய்கின்ற வேளையில் யாரையும் இழுத்தோ அல்லது தள்ளியோ விடாதீர்கள்.

7) உங்களின் தவாப் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு நீங்கள் ஹஜருல் அஸ்வத் கல்லினை முத்தமிட வேண்டுமென்ற அவசியமில்லை. அதிகளவிளான நெரிசலுள்ள போது நீங்கள் அக்கல்லின் பக்கமாக நீங்கள் உங்களின் கையினை நீட்டி “அல்லாஹு அக்பர்” என்று சொன்னால் போதுமானது. மேலும், ஒன்றில் தெளிவுடனிருங்கள் அக்கல் எந்தச்சக்தியுமற்றது. நீங்கள் அக்கல்லினை முத்தமிடுவது இறைத்தூதரின் சுன்னாவினையே பின்பற்பற்றுவதனாலேயேயன்றி வேறு தேவைக்காகல்ல.

மேலும், ஹஜருல் அஸ்வத்தினை முத்தமிடுவதற்காக யாரையும் தள்ளி விட்டோ, இழுத்தோ அநாகரீகமாக நடந்து கொள்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.

8) தவாப் செய்கின்ற போது, கஃபாவின் சுவர்களினைத் தொட்டுக்கொண்டு நடப்பதினைத் தவிருங்கள். இறைத்தூதர் ஹஜருல் அஸ்வத்தினை தவிர வேறிடங்களை தொட்டதில்லை.

மேலும் ஹஜருல் அஸ்வதின் அருகில் நீண்ட நேரம் நிற்காமல் விலகி விடுங்கள்.

9) உங்கள் இரண்டு ரக்ஆத்துகளை மிகவும் நீட்டாமல் சுருக்கிக்கொள்ளுங்கள். மக்ஆமு இப்ராஹிமில் துஆச் செய்வதாக சுன்னா இல்லை. எனவே, தவாப்பினை முடித்துக் கொண்டு சென்று விடுங்கள்.

10) மினா, அறபா, முஸ்தலிபா போன்ற இடங்களில் நீங்கள் இருக்குமிடங்கள் புனிதப்பகுதிக்கு உள்ளேயா அல்லது வெளியேயா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும், மக்கள் இருப்பதற்கும் துங்குவதற்கும் அலைகின்ற போது, உங்கள் தேவைக்கதிகமானளவில் இடங்களை ஒதுக்காதீர்கள்.

11) அறபா, முஸ்தலிபாவில் மட்டுமே நீங்கள் சேர்த்துத் தொழ முடியும். ஆனால், மினாவில் தொழுகைக்குரிய நேரத்திலேயே அவற்றினை நிறைவேற்ற வேன்டும்.

அறபாவில் தங்கியிருக்கும் போது மஸ்ஜிதுல் அறபாவினை நோக்கி தொழவோ பிரார்த்திக்கோ கூடாது. எப்போதும் அவை கிப்லாவினை நோக்கியே இருக்க வேண்டும்.

12) முஸ்தலிபாவிலேயே மஃரிப், இஷா என்பவற்றினைத் தொழ வேண்டும். நீங்கள் 11 மணியினை அடைந்து விட்டால் வீதியில் இருந்தாலும் உங்கள் தொழுகையினை நிறைவேற்றுங்கள்.

மஃரிப் நேரத்திற்கு முன் அறபாவினை விட்டுச்செல்லக்கூடாது. சிலர் அந்நேரத்திற்கு முதலே அறபாவினை விட்டுச்செல்கின்றனர்.

சிலர் முஸ்தலிபாவினை அடைய முதலே அடைந்து விட்டதாக எண்ணி தொழுது விடுகின்றனர். எனவே, முஸ்தலிபாவினை அடைந்து விட்டீர்களா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

13) ஜமாரத் என்பது பேயோ அல்லது சைத்தானோ அல்ல. நாம் பிழையான எண்ணங்களுடன் அவற்றிக்கு கல்லெறிகின்றோம். கல்லெறிதல் என்பது ஒவ்வொரு தடவையும் “அல்லாஹு அக்பர்” என்ற வார்த்தையுடன் ஒவ்வொரு தனித்தனி கற்களாக சிறியதிலிருந்து பெரிய கல்லாக 7 தடவைகள் எறிவதாகும்.

ஆனால், நாம் அங்கிருப்பது சைத்தான் என எண்ணி ஆவேசத்துடன் பெரிய கற்கள், கற்குவியல்கள் பாதணிகள் என்பவற்றினை வீசுகின்றோம். இவை நபி வழியல்ல என்பதைப்புரிந்து கொள்ளுங்கள். மேலும், ஒவ்வொரு தடவையும் கல்லெறியும் போதும் “அல்லாஹு அக்பர்” என்றே எறிய வேன்டுமே தவிர, “பிஸ்மில்லாஹ்” என எறியக்கூடாது.

மூலம் : ஆங்கில கட்டுரை
Common mistakes in Hajj.
மொழிபெயர்ப்பு : ஷியான் யாக்கூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here