வடமத்திய மாகாண சபை உறுப்பினர் அல் ஹாஜ் SHM.அன்ஸாரின் நிதியொக்கீட்டில் உதவிகள் வழங்கல்

0
181

ஆரிப் எஸ்.நளீம்

வடமத்திய மாகாண சபை உறுப்பினர் அல் ஹாஜ் SHM.அன்ஸார் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொக்கீட்டிலிருந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தமன்கடுவ பிரதேச செயலகத்தில் இன்று 10.08.2017ம் திகதி இடம்பெற்ற இவ்வுபகரணங்கள் வழங்கும் நிகழ்வில், வடமத்திய மாகாண சபை உறுப்பினர் அல் ஹாஜ் SHM.அன்ஸார் அவர்கள் கலந்து கொண்டு தையல் இயந்திரம், மண்வெட்டி, சீமெந்து பக்கட்டுக்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், பிரதேச செயலக அதிகாரிகள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன், சீமெந்து பக்கட்டுக்கள் வழங்குவதில் கடந்த காலங்கள் போன்று சரியான நடைமுறை கடைப்பிடிக்கப்படாமை காரணமாக மக்கள் சில அசெளகரியங்களை எதிர்நோக்கியதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. WhatsApp Image 2017-08-10 at 11.07.31 AM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here