சட்டத்தை கையில் எடுத்து இனவாதத்தை தூண்டும் டான் பிரசாதை கைது செய்யவும்..

0
234

unnamedசட்டத்தை கையில் எடுத்து இனவாதத்தை தூண்டும் டான் பிரசாதை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாராம்

சில காலமாக மௌனமாக இருந்த டான் பிரசாத் வெல்லம்பிட்டியை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் ஆய்வு என்ற பெயரில் சிங்களை பெண்களை மையப்படுத்தி கருத்தடை மருந்து கலந்த பாலினை வழங்கி வருவதாக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இம் முறைப்பாடானது சிங்கள – முஸ்லிம் இன முரண்பாட்டை தூண்டும் வகையில் அமைந்துள்ளதால் இவரின் குறித்த முறைப்பாடு தொடர்பில் பொலிசார் மிகவும் கரிசனை கொண்டு செயற்பட வேண்டும்.

குறித்த முஸ்லிம் பெண்ணை அறியாமல் முறைப்பாடு செய்ய முடியாது. குறைந்தது குறித்த கருத்தடை பால் வழங்கிய பெண்களை பரிசோதனை செய்வதன் மூலம் இப்படியான ஒரு நிகழ்வு நடந்துள்ளதா என்பதை மிக இலகுவாக அறிந்துகொள்ள முடியும்.

குறித்த பெண் தவறு செய்திருந்தால் அப் பெண் கைது செய்யப்பட்டு அவருக்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.டான் பிரசாத் பொய்யை கூறி இம் முறைப்பாட்டை செய்திருப்பின் அவருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.டான் பிரசாத் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டார் என்ற வகையில் ஏற்கனவே நீதி மன்றத்தால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என்பதால் அவருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க முடியும்.

இருப்பினும் இவ்விருவரும் கைது செய்யப்படப் போதில்லை என்பதே நடைபெறப்போகின்றது. இதனூடாக எஞ்சப் போவது சிங்கள மக்களின் உள்ளங்களில் முஸ்லிம்கள் பற்றிய நச்சு எண்ணங்கள் தான். டான் பிரசாத் என்பவர் ஒரு சாதாரண நபர்.அவர் பெண்களுடன் கும்மாளமடிப்பது, மதுவருந்துவது போன்ற அநாகரிக செயற்பாடுகளின் பல புகைப்பட ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி மக்களின் அதிருப்தியை சம்பாதித்த ஒருவர். அவருக்கு எதிராகவே இலங்கை அரசால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் இவ்வாட்சியாளர்கள், தாங்கள் தான் இந் நாட்டை ஆட்சி செய்பவர்கள் என கூற வெட்கப்பட வேண்டும். அத்தோடு இனி ஒரு போதும் இவ்வரசினால் முஸ்லிம்களுக்கு எந்த தீர்வும் கிட்டப்போவதில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் செல்வாக்கற்ற இப்படியான நபர்கள் துள்ளவில்லை.ஞானசார தேரரை இந்த அரசாங்கம் கைது செய்து நீதியின் முன் நிறுத்தி இருந்தால் இவ்வாறானவர்கள் துள்ளி இருக்க மாட்டார்கள்.இந்த ஆட்சியை கொண்டு வருவதில் முஸ்லிம் சமூகமே மிகக் கூடுதலான பங்களிப்பை வழங்கியமையே இதில் கவலைக்குரிய விடயமாகும்.(F)

joint opposition tamil media unit

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here