அமைப்பாளர் றபீலின் முயற்சியினால் காவத்தமுனை மத்திய மருந்தகம் கிராமிய வைத்தியசாலையாகத் தரமுயர்வு

0
261

gfgஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
கல்குடா-ஓட்டமாவடி-காவத்தமுனையில் இயங்கி வருகின்ற அரசாங்க மத்திய மருந்தகமானது, கிராமைய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக கல்குடாத்தொகுதி சிறீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல் தெரிவிக்கின்றார்.

புதிதாக கிழக்கு மாகான ஆளுனராகப் பதிவியேற்றுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் றோகித்த போக்கொல்லாகமவிடம் றபீலினால் வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு குறித்த காவத்தமுனை மத்திய மருந்தகம் அமையபெற்றுள்ள இடம் சம்ம்பந்தமான மதிப்பீட்டறிக்கையினைச் சமர்ப்பிக்குமாறு ஆளுனரின் செயலாளரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பணிப்புரையில் மருந்தகத்தினை சகல வசதிகளையும் கொண்ட கிராமிய வைத்தியசாலையாகத் தரமுயர்த்துவதுடன், அதற்குத்தேவையான கட்டடங்கள், வைத்தியர், தாதிமார்கள், ஏனையா சிற்றூழியர்கள் ஏனைய ஆளணிகள் சம்பந்தமாக மதிப்பீட்டறிக்கையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு குறித்த மருந்தகம் தரமுயர்த்தப்படுவதினால் காவத்தமுனைப் பிரதேசத்தில் நிலவி வருக்கின்ற வைத்தியசாலைக்கான தேவை மற்றும் ஏனைய சுகாதாரப்பிரச்சனைகள், தூரப்பிரதேசங்களுக்கு வைத்திய சேவையினை நாடிச்செல்வதிலுள்ள செலவீனங்கள், நிரந்தரமாக வைத்தியர் ஒருவர் மருந்தகத்தில் கடமையில் ஈடுபட முடியாமலிருப்பது, அத்தியாவசியத் தேவையாகவுள்ள வைத்திய சேவையினை 24 மணி நேரமும் காவத்தமுனை மக்களினால் பெற்றுக்கொள்ள முடியாமலிருப்பது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடித்தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பது முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயமாகும்.20170810_185844gfg

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here