இலங்கை ஹாஜிகளுக்கு ஜித்தா விமான நிலையத்தில் விசேட ஒழுங்குகள்

0
307

ubHDd7qஇக்பால் அலி
நேற்றுடன் ஜித்தா விமான நிலையத்தில் 745 ஹாஜிகள்  வருகை தந்துள்ளனர். மொத்தமாக உலக நாடுகளிருந்து இது வரை 115600 ஹாஜிகள் வருகை. பாதுகாப்பு சுகாதார வசதிகள் ஒழுங்கள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

இலங்கையிலிருந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா செல்லும் ஹஜ் யாத்திரையாளர்களை வரவேற்பதற்காக ஜித்தா விமான நிலையத்தில் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத்தூதுவராலயம் விசேட ஒழுங்குகளைச் செய்துள்ளன.

இலங்கையிலிருந்து இதுவரை ஜித்தா விமான நிலையத்திற்கு 745 பேர் வரை வருகை தந்துள்ளனர். உலக நாடுகளிலிருந்து இதுவரை  மொத்தமாக 115600 ஹாஜிகள் வருகை தந்துள்ளனர். பாதுகாப்பு, சுகாதார வசதிகள் சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுராலயத்தின் தூதுவர் அஸ்மி தாசிம், பதில் கவுன்ஸிலர் ஜெனரல் எஸ்.எல்.கே. நியாஸ், மொழிபெயர்ப்பு அதிகாரி நளீர் மற்றும் ஜித்தா விமான நிலைய அதிகாரி ரிழ்வான் ஹனிபா மற்றும் தூதுவராக அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் எனப்பல அதிகாரிகள் களத்தில் இறங்கி நேரடியாகவே இந்த  உதவிகளைச் செய்து வருகின்றனர்.

விமானத்த்தில் கொண்டு வரும் பொதிகளை இலகுவாக எடுத்துக்கொடுத்தல், வாகன வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தல், மருத்துவ சேவை, மேலதிக அனைத்து சேவைகளையும் துரிதமாக களத்திலிருந்து மேற்கொண்டு வருகின்றனர்.

புனித ஹஜ் யாத்திரைக்காக முதலாவது ஹஜ் யாத்திரை குழுவினர் கடந்த 6-7-2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் 27 ஆம் திகதி வரை ஹஜ் யாத்திரையாளர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜித்தா விமான நிலையம்  நோக்கிச்சென்ற வண்ணமுள்ளனர்.

இம்முறை இலங்கையிலிருந்து ஹஜ் கடமைக்காக 2840  வரை செல்லவுள்ளனர். அதே வேளை, கட்டுநாயாக்க விமானத்திலிருந்து செல்லும் ஐந்து கென்டனர் லெகேஜூடன் செல்லாத காரணத்தினால் சுமார் 86 பொதிகள் வரவில்லை. அதில் 60 ஹாஜிகள் தங்களது பொதிகளின்றியுள்ளனர்.

அதில்  30 பேரளவில் ஹாஜிகள் வெறும் இஹ்ராம் உடையில் தான் சென்றுள்ளனர். அதனைப்பெற்று மக்காவில் ஹாஜிகள் தங்கியிருக்கின்ற ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், ஹாஜிகள் வரும் போது, கையில் கொண்டு வரும் பொதிகளின் அளவுக்கு தங்களுக்குத்தேவையான மருந்துப்பொருட்கள் எடுத்துச் செல்வது அவசியமெனவும், அதே நேரம் சவூதி அரேபியாவில் தடை செய்யப்பட்ட மருந்து வகைகளை எடுத்து வர வேண்டாமெனவும் ஒரு சில உடைகளையும் அதில் எடுத்து வர வேண்டுமெனவும், ஏற்கெனவே அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட விடயம்.

எனினும் இலங்கையிலிருந்து வருகை தரும் ஹாஜிகள் இது பற்றி கவனத்திற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here