கல்குடா மஜ்லிஸில் சூறா சபையின் பெயரை எவரும் பயன்படுத்தினால் சட்டநடவடிக்கை- தலைவர் ஈ.சஹாப்தீன்

0
79

19059531_482762435398133_5056412111004072943_nஓட்டமாவடி செய்தியாளர் அ.ச.முகம்மது சதீக்
எமது பிரதேசத்தில் அண்மையில் கல்குடா மஜ்லிஸில் சூறா சபையானது, பொதுச்சபை மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒரு சபையும் பழைய நிருவாகத்திலுள்ள சிலரும் இரு சபையாக இயங்கி வந்ததனை நாமறிவோம்.

தற்போது பொதுச்சபை மூலம் தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஈ.சகாப்தீன் அவர்களைத் தலைவராகக் கொண்டியங்கி வந்த கல்குடா மஜ்லிஸில் சுறா சபையை கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயகலம் அங்கீகரித்து ஒரு தொண்டு சேவை நிறுவனமாகப் பதிவு செய்து சான்றிதழை வழங்கியுள்ளதாக அதன் தலைவர் ஈ.சகாப்தீன் சட்டத்தரணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனால், பழைய நிருவாகத்தினரோ அல்லது வேறு எவருமோ இப்பெயரைப் பயன்படுத்தி செய்திகள் வெளியிடுவதோ அல்லது சமூக வலைத்தளத்தலங்களில் செய்திகள் வெளியிட்டாலோ அவர்கள் மீது சட்ட நடவடிக்கைக்கு எடுக்கவுள்ளதாக அவர்களது உத்தியோகபூர்வ பதிவு இலக்கத்துடன் கூடிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, சகல இலத்திரனியல் ஊடகங்களும் மற்றும் ஏனைய அச்சுப்பத்திரிகை நிறுவனங்கள், புலக்காட்சி ஊடகங்களுக்கும் இது பற்றி தெளிவுபடுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
New Doc 2017-08-10 (1)_1
Capture

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here