ஹஜ் யாத்திரிகர்களின் நன்மைகருதி சிறப்பான வைத்திய சேவை-சவூதி அரேபிய சுகாதார அமைச்சு

0
263

ffஇக்பால் அலி
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக வெளிநாடுகளிலிருந்து வருகை தந்துள்ள யாத்திரையாளர்களுக்கு பல்வேறு இடங்களில் விசேடமாக வைத்திய, சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு சிறந்த சுகாதார சேவைகளை வழங்கப்படுவதுடன், தொற்றுநோய் வரமால் தடுப்பூசி செலுத்தும் விடயத்தில் கூடிய கவனத்செலுத்தப்பட்டு வருகின்றது.

அதே நேரம், இதுவரையில் தொற்று நோய்களுக்குள்ளானவர்கள் எவருமில்லையென உறுதி செய்துள்ளதாக சவூதி அரேபியா நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

சுகாதார அமைச்சு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,
சர்வதேச நோய்களைக் கண்டறிவதற்கான நிலையங்கள் மக்கா, மதீனா, மினாவில் அமைக்கப்பட்டள்ளன. அதே போன்று யாத்திரையாளர்கள் வரக்கூடிய ஜித்தா விமான நிலையம், மதீனா உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும் விசேட சிகிச்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், நோய் எதிர்ப்புத்தடுப்பூசி செலுத்தாமல் 48 நாடுகளிலிருந்து வருகை தந்த 449903 பேருக்கு நோய் எதிர்ப்புச்சக்திகள் வந்திறங்கிய உடனே இவரையிலும் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கு நூறு வீதம் தொற்று நோய் ஏற்படுவதற்கான எந்த வாய்ப்புமில்லையென்பதை அமைச்சு உறுதிப்படத் தெரிவிக்கின்றது.

அது போன்று, சிறுவர்களுக்கான  தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. மக்காவில் அமைக்கப்பட்டுள்ள விசேட சிகிச்சைப்பிரிவில் 1004 பேரும், வெளியேயுள்ள விசேட சிகிச்சை நிலையங்களில் 249 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

மக்கா வைத்தியசாலையில் 90 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பெரிய சத்திர சகிச்சைகள் எட்டு நடைபெற்றுள்ளன. பழைய நோயின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாத்திரிகர்களுக்கே இலவசமாக சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனோடு, இது வரையும் 73 பேருக்கு இரத்தச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், அரபா, மினா, முத்தலிபா ஆகிய 25 பகுகளிலுள்ள இடங்களில் விசேட வைத்தியசாலை சேவைகள் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிலையங்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 500 முதல் 5000 பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற முடியும். இதே போன்று மேலும் விசேடமாக மக்காவில் 155 சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் விசேடமாக 43 நிபுணத்துவம் வாய்ந்த சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மதினாவில் 18 விசேட சுகாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு விசேட சுகாதார சேவைகளை வழங்கிப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here