இலாபத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த நல்லாட்சி அரசு கடும் முயற்சி-ரொமேஷ் பதிரண

0
262

IMG_0813இலாபத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் பலவற்றை தனியார் மயப்படுத்த அல்லது நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து விட  நல்லாட்சி அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ரொமேஷ் பதிரண சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றிரவு ஹிரு தனியார் தொலைக்கட்சியில் இடம்பெற்ற பலய அரசியல் நிகழ்சியில் கருத்துக்கூறும் போது அவர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.

கடந்த வாரம் வெளியான தேசிய பத்திரிகைகளை மேற்கோள் காட்டி தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனதிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டு விட்டது. அடுத்து மத்தளை விமான நிலையம், அதனைத்தொடர்ந்து ஹில்டன் ஹோட்டல் பங்குகளை விற்கவும், நில அளவையாளர் திணைக்களத்தின் பணிகளை முற்றாக அமெரிக்க கம்பனிக்கு வழங்கவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவை ஒரு புறமிருக்க இலாபத்தில் இயங்கும் லங்கா ஹொஸ்பிடல் திட்டமிடப்பட்டு நஷ்டத்தை நோக்கி இயக்கப்படுகிறது. அதையும் தனியாருக்கு வழக்கும் திட்டமே இந்த அரசுக்குள்ளது.

ஹம்பாந்தோட்டை சீனாவுக்கு திருகோணமலை இந்தியாவுக்கு இந்நல்லாட்சி தொடர்ந்தால் எமது நாட்டில் எதிர்காலச் சந்ததியினருக்கு எதுவும் எஞ்சாதென அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here