கிழக்கு மாகாண சபையைக் கலைக்கும் ஜனாதிபதியின் முடிவுக்கு நன்றி – ஏ.எல் தவம்

0
213

FB_IMG_1499524217013-நமது செய்தியாளர் –
கிழக்கு மாகாண சபையைக்கலைத்து தேர்தல் நடாத்தத் தீர்மானித்துள்ள SLFP மத்திய குழுவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம் என இன்று அக்கரைப்பற்றில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட கல்வியியலாளர் சமூக அமப்பினருடனான சந்திப்பின்  போது கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,

மக்களின் ஜனநாயக உரிமையை மதித்து, உரிய காலத்தில் தேர்தல் நடாத்த வேண்டுமென்ற எமது கொள்கைக்குச்சார்பாக ஜனாதிபதி தலைமையில் முடிவெடுக்கப்பட்டமைக்காக ஜனாதிபதிக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விரைவில் பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியும் இவ்வாறான தீர்மானத்திற்கு வர வேண்டும். அதனூடாக நாட்டில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட வேண்டுமென்பதில் ஆவலாகவுள்ளோம்.

அத்துடன் நல்லாட்சி தொடர்பிலாகவும், வதந்திகளையும் பொய்யுரைகளையும் நடைமுறைகளுடன் சம்பந்தப்படாதவர்களுக்கும் கிழக்கு மக்கள் பாடம் படிப்பிக்கும் காலம் நெருகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here