நல்லாட்சியில் முஸ்லிம் மாணவியரின் பர்தாக்களுக்கு ஆபத்து

0
212

IMG_20170811_212155முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய ஆட்சிக்காலத்தில், அரசியல் நோக்கில் முஸ்லிம் பெண்கள் அணிகின்ற பர்தாவை கழற்றப்போவதாக சிலர் விசமப்பிரச்சாரங்கள் செய்தார்கள்.

இவற்றுக்கு சில பெரும்பான்மையின அமைப்புக்கள் முஸ்லிம் பெண்களின் ஆடைகள் தொடர்பில் கூறிய கருத்துக்கள் சாதகமாக அமைந்திருந்தன.

அந்நேரத்தில்  இவற்றுக்கெல்லாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சிறிதும் இடம் வைக்கவில்லை.

தற்போது பரீட்சைகள் வந்தாலே முஸ்லிம் பெண்களின் பர்தாக்களை கழற்றும் சம்பவங்களும் வந்து விடுகின்றன.

கடந்த நோன்பு காலத்தில் இன்று எந்தக்கடை பற்ற வைக்கப்படும் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அதிகாரிகளுக்கு இவ்வாட்சியாளர்கள் சிறியதொரு உத்தரவு பிறப்பித்தால் இந்த பிரச்சினையை முடித்து விடலாம்.

இருந்த போதிலும் இது தொடர்பில் கல்வியமைச்சர் மற்றும் இவ்வாட்சியாளர்கள் சிறிதேனும் கவனம் செலுத்துவதாக அறிய முடியவில்லை.

பரீட்சை திணைக்களமானது பரீட்சையின் போது முழுமையாக மூடும் வகையான ஆடைகளை அணியத்தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதோடு, அதற்கு சில நியாயங்களையும் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சைத்திணைக்களம் மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கையை எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் செயலாக அமையப்போகிறது.

அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில் முன் வைக்கப்பட்ட இனவாதிகளின் இக்கோரிக்கைக்கு இன்று சட்ட அங்கீகாரம் கிடைக்கப்போகிறது.

இந்நடவடிக்கையை வைத்து நோக்குகின்ற போது, இது இவ்வாட்சியாளர்களின் பூரண அனுசரணையில் இடம்பெறும் வண்ணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாட்சியாளர்கள் இது தொடர்பில் பரீட்சைத்திணைக்களத்துக்கு முஸ்லிம்களுக்கு சார்பான வகையில் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தால் பரீட்சைத்திணைக்களம் இத்தகையை நடவடிக்கையை நோக்கி சென்றிருக்காது.

இதற்காகத் தான் இலங்கை முஸ்லிம்கள் இந்த ஆட்சியைக்கொண்டு வந்தார்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here