1000 கோடி ரூபா கல்குடா குடிநீா்த்திட்ட விஷேட கலந்துரையாடல் அமா்வு-பொது மக்களுக்கான திறந்த அழைப்பு

0
218

1000 கோடி ரூபா குடிநீா்த்திட்டத்திற்கான அமா்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா அமைப்பாளர் HMM.றியாழ் அவர்களின் தலைமையில்  13.08.2017ம் (ஞாயிற்றுக்கிழமை) திகதி பி. ப. 2.30 மணியளவில் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலுடன் நடைபெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத்தலைவரும் நீா் வழங்கல் நகரத்திட்டமிடல் அமைச்சருமான கௌரவ ரவுப் ஹக்கீம் அவா்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

இவ்விஷேட கலந்துரையாடல் அமர்வில் அமைச்சர் கௌரவ ரவுப் ஹக்கீம் இத்திட்ட முன்னெடுப்பு தொடர்பிலும் அமுல்படுத்துகை தொடர்பிலும் விஷேட உரையாற்றவுள்ளதுடன், பொது மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.

எனவே அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்,

ஊடகப்பிரிவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here