பொதுச்சந்தைக்குப் பொருத்தமான இடம் தற்போதைய அமைவிடமே-கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கத்தினர்

0
286

1(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை பொதுச்சந்தையினை வேறு இடத்தில் அமைப்பதனைவிட குறித்த சந்தையினை புனர்நிர்மாணம் செய்வதே சாலச்சிறந்ததாகக் காணப்படுவதாக கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கத்தினர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்து, அப்பணியினை விரைவுபடுத்தி செய்து தருமாறும் கேட்டுக்கொண்டனர்.

நகரத்திட்டமிடல் அமைச்சினால் கல்முனை பொதுச்சந்தையினை புனர்நிர்மானம் செய்வதா? அல்லது வேறிடத்தில் புதிதாக அமைப்பதா? என்பது தொடர்பாக கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கத்தினரின் நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகரத்திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அறிந்து கொள்ளும் வகையிலான சந்திப்பொன்றை விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஏற்பாடு செய்திருந்தார். இதன் போதே குறித்த வர்த்தக சங்கத்தினர் மேற்கண்டவாறு வேண்டிக்கொண்டனர்.

விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சரின் கல்முனை அலுவலகத்தில் நேற்று (12) சனிக்கிழமை இரவு நடைபெற்ற மேற்படி சந்திப்பில் மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், நீர் வழங்கல் மற்றும் நகரத்திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச்செயலாளர் றகுமத் மன்சூர், விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், ஏ.எம். றினோஸ், கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.பி. ஜமால்தீன் ஹாஜியார், செயலாளர் ஏ.எல். கபீர் உள்ளிட்ட சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கத்தின் விருப்பிற்கமைவாகவே எம்மால் குறித்த வேலைத்திட்டத்தை மேற்கொள்ள முடியுமெனத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் புனர்நிர்மாணப்பணியினை விரைவில் ஆரம்பிக்கத் தேவையான நடவடிக்கையினை மேற்கொள்வதாக இதன் போது தெரித்தார். அத்தோடு, அதற்கான ஏற்பாடுகளை விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

கல்முனை பொதுச்சந்தையினை புனர்நிர்மானம் செய்யும் வகையில், குறித்த சந்தைக்கருகாமையிலுள்ள வெற்றுக்காணியில் உரிமையாளருடனான உடன்படிக்கையுடன் தற்காலிக கூடாரங்களை அமைத்து சந்தை நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.1 2 IMG_8827 IMG_8830 IMG_8836

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here