கிழக்கு முதலமைச்சரின் ஏற்பாட்டில் ஐந்தாந்தர மாணவர்களுக்கான வழிகாட்டிக்கருத்தரங்குகள்

0
250

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அனுசரணையில்  ஐந்தாந்தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவ, மாணவியருக்கான  இலவச பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கொன்று  ஏறாவூர் அல் ஜிப்ரியா பாடசாலையில் இடம்பெற்றது,

 இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆரம்பித்து வைத்ததுடன், ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் இர்ஷாதின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது,

இக்கருத்தரங்கில் பிரபல வளவாளர் திரு.வு.சபேசன் (SLS-III) அவர்கள் கலந்து கொண்டு அவரது நெறியாள்கையில் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்களை வழங்கி மாணவர்களுக்கான பயிற்சியளிக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் பல நூற்றுக்கணக்கான மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், முன்னாள் நகர சபை உறுப்பினர் பாஸித் அலி  மற்றும் முதலமைச்சரின் இணைப்புச்செயலாளர் அப்துல் நாஸர் உட்பட மேலும் பல ஆதரவாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இக்கருத்தரங்கானது (12,13.08.2017) ஆகிய இரு தினமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.888111அஅஅ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here