மத்திய முகாம் பள்ளிவாயலுக்கு கலாநிதி ஏ.எம்.ஜெமீல் உதவி

0
200

முக்தார் அஹ்மத் 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவர் கெளரவ ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் வழிகாட்டலில் கடந்த 29.07.2017ம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் மத்திய முகாமுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இவ்விஜயத்தின் போது மத்திய முகாம் முதலாம் வட்டாரம் நூராணியா ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகத்தினரால் பள்ளிவாயல் தேவைகள் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த வேண்டுகோளையேற்று பிரதித்தலைவர் சகோதரர் ஜெமீல் பள்ளிவாயலுக்குத் தேவையான ஜெனரேட்டர் மற்றும் மையவாடிகளுக்கான மின் விளக்கும் ஆகியவற்றை நேற்று 13.08.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அஸர்த்தொழுகையின் குறித்த பள்ளிவாயல் நிருவாகத்தினரிடம் கையளித்தார்.20170813_162134 20170813_162139 20170813_164734 20170813_170313

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here