தாஜுதீனைக் கொலை செய்தது முதலில் யோசித, பின்னர் நாமல், தற்போது ஷிரந்தி என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
பொது ஜன பெரமுன கட்சியின் கண்டி சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டிக்கிளை அங்குரார்ப்பண நிகழ்வில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த அரசாங்கத்துக்கு எதிர்ப்பு வரும் போது அல்லது தேர்தல் வரும் போது எங்களது குடும்பத்தின் மீது ஏதாவது வீண் பழியைச் சுமத்துவார்கள். அந்த வகையில், தற்போது தாஜுதீன் களத்துக்கு வந்துள்ளார். தாஜுதீனைக் கொலை செய்தது முதலில் யோசித பின்னர் நாமல் தற்போது ஷிரந்தி என்று கூறுகிறார்கள்.
எனது காலத்தில் பிரதம நீதியரசரை நாம் பாராளுமன்றத்தின் ஆணையுடன் மாற்றினோம். தற்போது நிலைமை தலை கீழாகவுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவருக்கெதிராக ஆளுங்கட்சியே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருகிறது.
தனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டால், அரசாங்கம் பதவி விலக வேண்டுமென விஜேதாச கூறியுள்ளார் எனக்குறிப்பிட்டார்.