காத்தான்குடி பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தான முகாம்

0
196

IMG-20170311-WA01581-678x381(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தினால் நடாத்தப்படும் நடமாடும் பொலிஸ் சேவையின் ஓரங்கமாக ‘உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் மனித நேயம் பேணும் மாபெரும் இரத்த தான முகாம் எதிர்வரும் 16-08-2017ம் திகதி புதன்கிழமை காலை 8.00 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சி தலைமையில் இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ரீ.மகேஸ்வரன் தெரிவித்தார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து இடம்பெறும் இம்மாபெரும் இரத்த தான முகாமில் இரத்த தானம் செய்வதற்கு விருப்பமுடைய இளைஞர், யுவதிகள், பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது இரத்தத்தை தானமாக வழங்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here