Future Mind அமைப்பினால் வாகனேரி அறநெறிப்பாடசாலை மீள் ஆரம்பம்

0
83

வாழைச்சேனை ரமணன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வாகனேரிப் பிரதேசத்தில் அனைத்து வளங்களும் இருந்தாலும், பல்வேறு அடிப்படைத் தேவைகளில் குறைபாடுள்ள பிரதேசமாகவே காணப்படுகின்றது.

கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம் தொடர்பாக பிரச்சினை காணப்பட்டாலும் மிகவும் அத்தியாவசியமானதாகக் காணப்படும் குடிநீர்ப்பிரச்சினை பல ஆண்டு காலமாகக் காணப்படுகின்றது.

இதன் காரணமாக, நாம் பலமுறை அங்கு சென்று பிரதேச அபிவிருத்திச்சங்கம், முன்பள்ளி ஆசிரியர்கள், பாடசாலை ஆசிரியர்கள், ஊர் மக்கள் ஆகியவர்களுடன் தொடர்புகளைக் கொண்டு குறைபாடுகளை அறிந்துள்ளோம்.

இதன் முதற்கட்டமாக, இன்று (13.08.2017) இரண்டு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட அறநெறி பாடசாலையை எமது Future Mind அமைப்பினால் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், திரு. ஸ்ரீதரன் ஐயா அவர்கள் அறநெறி பாடசாலையை அவரின் சொற்பொழிவுடன் ஆரம்பித்து வைத்து, அறநெறிப் பாடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர்களுக்கும் விளக்கினார்.

இதனைத்தொடர்ந்து திரு பிரபாகரன் அவர்களால் அன்று வருகைத் தந்திருந்த மாணவர்களுக்கு கொப்பிகள் மற்றும் பென்சில்கள் வழங்கப்பட்டு சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது.

அத்துடன், அறநெறிப் பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கான காலை உணவு கொடுப்பது சம்பந்தமாக தன்னாலான உதவிகளைச் செய்வதாகவும் சொன்னார்.

மற்றும் அங்கு காணப்படும் மூன்று முன்பள்ளிக்கான தசை நார் விருத்தி உபகரணங்கள் நோர்வே பரந்தாமன் மகேஷ்வரி அறக்கட்டளை உதவியுடன் Future Mind அமைப்பால் வழங்கி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அறநெறி பாடசாலை ஆசிரியர்களால் அங்குள்ள குறைபாடுகள் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான தீர்வும் எடுக்கப்பட்டு அதைத் தொடர்ந்து தரம் 5 க்கு கீழுள்ள மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புக்களை அப்பிரதேசத்தில் கல்வி கற்ற மூன்று ஆசிரியர்களைத் தெரிவு செய்து Future Mind அமைப்பின் சார்பாக நடாத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.IMG_8566 IMG_8568 IMG_8569 IMG_8571

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here