சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்துக்கு உரிமை கோர அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கே முழு உரிமையுண்டு-அமைச்சர் பைசர் முஸ்தபா

0
294

IMG-20170814-WA0084(முக்தார் அஹமட்)
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபிப்பது சம்பந்தமான விசேட கலந்துரையாடலொன்று நேற்று மாலை 14.08.2017ம் திகதி திங்கட்கிழமை உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சில் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவரும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சருமான கெளரவ ரிஷாட் பதியுத்தீனும் கலந்து கொண்டார்.

குறித்த கலந்துரையாடலில் கருத்துத்தெரிவித்த அமைச்சர் பைசர் முஸ்தபா,

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை இம்மாத கடைசி வாரத்திற்குள் விசேட வர்த்தமானி மூலம் வெளியிடுவதாகவும், இது தொடர்பில் தனது அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தேசியத்தலைவர் ரிஷாட் அவர்களிடமும், பிரதித்தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீலிடமும் உறுதியளித்தார்.

மேலும் அண்மைக்காலமாக முகநூலில் சாய்ந்தமருது உள்ளூராட்சி சம்பந்தமாக பலரும் உரிமை கோரும் தகவல்கள் பரிமாறப்படுகிறதே என்று அமைச்சர் ரிஷாட் அவர்களின் இணைப்புச்செயலாளர் சகோதரர் இர்சாட் ரஹ்மத்துல்லாவினால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் சம்பந்தமாக ஆரம்பம் முதல் இன்றுவரை என்னுடன் தொடர்புடன் இருப்பவர்களும், இதனை உரிமை கோருவதற்கு முழுத்தகுதியுடையவர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட், பிரதித்தலைவர் ஜெமீலைத்தவிர வேறு யாருமில்லையென்று ஆணித்தரமாகக் கூறி விட்டு, தனது கென்ய நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இங்கு கட்சியின் பிரதித்தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கெளரவ ஏ.எம்.ஜெமீல், முன்னாள் கொழும்பு மாநகர சபை ஆணையாளரும், NEDHA தலைவருமான உமர் காமீல் மற்றும் அமைச்சரின் இணைப்புச்செயலாளர் இர்சாட் ரஹ்மத்துல்லா ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.IMG-20170814-WA0084 IMG-20170814-WA0092 IMG-20170814-WA0094 IMG-20170814-WA0098

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here