இப்பிரதேசத்தின் சகல விடயங்களிலும் முனைப்புடன் செயற்பட்டவர் சட்டத்தரணி எம்.பி.எம்.ஹு சைன்-அனுதாபச்செய்தியில் பிரதியமைச்சர் அமீர் அலி

0
220

dddகல்குடாத்தொகுதியின் மூத்த சட்டத்தரணியும் எமது பிரதேசத்தின் சிறந்த கணிதப்பாட ஆசானுமாகிய எம்.பி.எம்.ஹு சைன் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சருமான எம்.எஸ்எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

நேற்று (14.08.2017) திங்கட்கிழமை காலை வபாத்தான ஓட்டமாவடியைச்சேர்ந்த பிரபல சட்டத்தரணியும் பதில் நீதவானும் முன்னாள் கோறளைப்பற்று காழி நீதிபதியுமான  எம்.பி.எம்.ஹுசைனின் மறைவை முன்னிட்டு பிரதியமைச்சர் எம்.எஸ்எஸ்.அமீர் அலி விடுத்துள்ள அனுதாபச்செய்தியிலேயே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரித்துள்ளதாவது,

எங்களை விட்டுப்பிரிந்த சட்டத்தரணி எம்.பி.எம்.ஹுசைனின் மிகவும் எழிமையாக நம்மிடையே வாழ்ந்த ஒருவராகும். காத்தான்குடியைப் பிறப்பிடமாகக்கொண்ட ஒருவராக இருந்த போதிலும், இப்பிரதேசத்தின் சகல விடயங்களிலும், மற்றும் 1990ம் ஆண்டு வட கிழக்கு மாகாணங்களில் பயங்கரவாதிகளால் இனப்படுகொலைகள் மற்றும் சொந்த இடங்களை விட்டு வெளியேற்றம் நடைபெற்ற போது, எமது பிரதேசத்தின் பாதுகாப்புத் தொடர்பாகவும் இருப்புத்தொடர்பாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், எமது பிரதேசத்தின் முக்கியஸ்தர்களுடன் இணைந்து, பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் இருப்புக்காக பாடுபட்ட ஒருவராகும்.

அத்துடன், கல்குடாப் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் உருவாக்கத்திற்குப் பாடுபட்டவர்களில் இவரும் மிக்கியமானவர் என்பதனை இச்சந்தர்ப்த்திலே தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகிறேன்.

அவரது மரணச்செய்தி எங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. எல்லாம் வல்ல இறைவன் அவரின் பாவங்களை மன்னித்து, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக எனப்பிராத்திப்பதோடு, அவரைப் பிரிந்து துயருறும் அன்னாரது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்களின் துயரங்களிலும் பங்கு கொள்கிறேன் என பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here