மீறாவோடை சக்தி வித்தியாலயத்தின் காணி வரைபடத்தில் உள்ளவாறு பெற்றுத் தரப்படும் – கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அநுர தர்மதாச

0
284

(கல்குடா செய்தியாளர்)

pro (61)வாழைச்சேனை மீறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மிக நீண்டகால பிரச்சனையாக இருந்த வந்த மைதானக் காணியை மீட்பதற்கு செவ்வாய்கிழமை பகல் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரர் தலைமையில் வந்த பொதுமக்கள் காணி ஆணையாளரின் வாக்குறுதிக்கமைய கலைந்து சென்றனர்.
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட மீறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான காணியின் ஒரு பகுதியை முஸ்லிம்கள் சட்டத்திற்கு முரணாக அபகரித்து குடிசை அமைத்துள்ளதாக கூறியும் அதனை கண்டித்தும் காணியை மீள பெறும் வகையில் இக்குழுவினர் வருகை தந்திருந்தனர்.
இதன்போது குறித்த காணி வேலியோரம் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரர் தலைமையில் வந்த பொதுமக்கள் வேலியை தகர்க்க முற்பட்ட போது பொலிஸார் தடுத்து நிறுத்தி நீதிமன்றத்தின் தடை உத்தரவுப் பத்திரத்தை வேலி யில் ஒட்டினர்.
நீதிமன்ற தடை உத்தரவை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரர் கிழித்தெறிந்து வேலி கம்பை பிடுங்கி எறிய அவரோடு வந்த பொதுமக்களும் வேலியை பிடுங்க முற்படும் போது பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
அதனையும் பொறுப்படுத்தாக பொதுமக்கள் வேலியை தகர்க்க முற்படும் போது பொலிஸ் பாதுகாப்பு படையினரால் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரர் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்டனர்.
தாக்குதலுக்கு இலக்கான பொதுமக்கள் ஆவேசகம் கொண்டு வேலியை பிடுங்கிய போது பொலிஸார் அடிதடி தாக்குதலை பெண்கள் மற்றும் ஆண்கள் மீது பிரயோகம் செய்தமையால் பலர் காயமடைந்துள்ளனர்.
இதன்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட போது பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டை பிரயோம் செய்து மோதலை சுமூக நிலைக்கு கொண்டு வந்தனர்.
இவ்விடயமாக குறித்த இடத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அநுர தர்மதாச மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி ரதன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பொதுமக்களிடம் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இவ்விடயமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நாளை புதன்கிழமை காணி விடயம் தொடர்பாக கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறும், பாடசாலை காணி வரைபடத்தில் உள்ளவாறு காணி பெற்றுத் தரப்படும் என கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அநுர தர்மதாச தெரிவித்தார்.
அதன் பிற்பாடு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரர் தலைமையில் வந்த பொதுமக்கள் கலைந்து சென்றதுடன், பொதுமக்களை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் அத்தியட்சகரிடம் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.(F)6b5cedcf-48ff-4f45-bf97-b5f0edc670b4 pro (2) pro (15) pro (57) pro (59) pro (60) pro (61) pro (62) pro (65) pro (71) pro (73) pro (76)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here