மீண்டும் சூடுபிடித்துள்ள சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம்: சில கேள்விகளும் சந்தேகங்களும்

0
159

13292867_1718742795062314_960966835_nசாய்ந்தமருது முகம்மத் இக்பால்
மிக நீண்ட காலமாக சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றக்கோரிக்கை இருந்து கொண்டு வருகின்றது. இக்கோரிக்கை சில காலங்களில் மூர்க்கமடைவதும், பின்பு சோர்வடைவதுமாகக் காணப்பட்டது.

இவ்வாறாக இந்தக்கோசம் சோர்வடைந்து கிடப்பிலிருந்த நிலையில், கடந்த 12.08.2017 ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சுயதொழிலுக்கான உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவர் ஹரீஸ் அவர்கள் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் சம்பந்தமாக பகிரங்க அறிக்கையொன்றினை விடுத்திருந்தார்.

அதாவது, சாய்ந்தமருது மக்களின் நீண்ட காலக்கோரிக்கையான தனியான உள்ளூராட்சி மன்றத்தை பல அழுத்தங்களுக்கு மத்தியில் விரைவில் கிடைக்கவிருக்கின்றது என்பதுவே அந்த அறிக்கையாகும்.

அத்துடன், இது முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி மட்டுமல்லாது, இதற்காக பிரதமர் ரணிலிடமிருந்து வாக்குறுதியினைப் பெற்றுக்கொடுத்ததாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து வந்ததாகவும் தற்போது அதற்கான காலம் கணிந்துள்ளதென்றும் தனதுரையில் கூறியிருந்தார்.

பிரதியமைச்சர் ஹரீசின் குறித்த உரையானது, அதே 12 ஆம் திகதியன்று ஊடகங்களிலும், முகநூல்களிலும் வெளியாகியது. அதன் பிற்பாடு, அதாவது மறுநாளான 13 ஆம் திகதி மாலை, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தரப்பிலிருந்து அமைச்சர் பைசர் முஸ்தபாவைச் சந்தித்ததாகவும், விரைவில் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்ற வர்த்தமானி அறிக்கை வெளியாக இருக்கின்றதென்றும் அறிக்கை வெளியாகியிருந்தது.

இதன் பிற்பாடு தான் இன்னும் பெற்றுக்கொள்ளப்படாத இந்த உள்ளூராட்சி மன்றத்துக்கு உரிமையாளன் யார்? என்ற பட்டிமன்றம் முகநூல் வாயிலாக விவாதிக்கப்பட்டு வருவதனைக் காணக்கூடியதாகவுள்ளது.

இங்கே கேள்வி என்னவென்றால், பிரதியமைச்சர் ஹரீஸ் 12 ஆம் திகதிய அந்த அறிக்கை வெளியிடாதிருந்திருந்தால், 13 ஆம் திகதி அமைச்சர் ரிசாத்தின் தரப்பிலிருந்து உரிமை கோரலுடனான அறிவிப்பு வெளியாகியிருக்குமா?

உண்மையில் ரிசாத் தரப்பினர்கள் தான் இதற்கு உரிமையாளர் என்றால், அதே 12 அல்லது அதற்கு முந்திய தினங்களில் இது சம்பந்தமாக அறிக்கை வெளியிட்டிருக்கலாமே? பிரதியமைச்சர் ஹரீசின் அறிவிப்பு வெளிவரும் வரைக்கும் இவர்கள் ஏன் வாய்மூடியிருந்தார்கள்? என்ற கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்து கொண்டே இருக்கின்றது.

இந்த உள்ளூராட்சி மன்றம் கிடைக்கின்ற சாதகமான சூழ்நிலை இருந்த போது, தாங்கள் அதில் பெயரெடுக்க வேண்டுமென்பதற்காக அவசரமாக அமைச்சர் பைசர் முஸ்தபாவினைச் சாய்ந்தமருதுக்கு அழைத்து வந்து விரைவில் சபை கிடைக்கவிருப்பதாகவும், அதற்காக அமைச்சர் ரிசாத் பாடுபடுவதாகவும் விளம்பரம் செய்தார்கள்.

பின்பு மீண்டும் இது இழுபறிபாட்டினால் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தான் அதிகாரமுள்ள கட்சியாகும். எனவே, அவர்களால் தான் இதனைப் பெற்றுத்தர முடியுமென்று பந்தை முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் திருப்பினார்கள்.

உள்ளூராட்சி மன்றத்துக்கான சாதகமற்ற சூழ்நிலை தெரிகின்ற போது, பழியை முஸ்லிம் காங்கிரஸ் தரப்பின் மீது போட்டு விட்டு விமர்சிக்க முடியுமென்றால், அதே அதிகாரமுள்ள முஸ்லிம் காங்கிரசுக்குத் தெரியாமல் உள்ளூராட்சி மன்றம் மலருமா? என்ற கேள்வியும் எழுகின்றது.

எனவே, முஸ்லிம் காங்கிரசின் முழு அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசத்தில் தனியான உள்ளூராட்சி மன்றமானது, முஸ்லிம் காங்கிரசின் அழுத்தமில்லாமலும், முஸ்லிம் காங்கிரசுக்குத் தெரியாமலும் நடைபெறப்போவதில்லையென்ற உண்மையை விளங்கிக்கொள்வதுடன், உண்மையில் இந்த சபை கிடைத்தால் அரசியலுக்கப்பால் நின்று அதற்காக உழைத்த சிவில் அமைப்பினர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here