சுதேச திணைக்களத்தின் வளர்ச்சி தொடர்பில் அமைச்சர் நஸீர் ஆராய்வு

0
146
IMG_20170816_204023சப்னி அஹமட்- 
கிழக்கு மாகாண சுகாதார அமைசின் கீழுள்ள சுதேச திணைக்களத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்முஹம்மட் நஸீர் தலைமையில் விசேட கூட்டமொன்று இன்று (16) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் திருகோணமலைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
 
இதன் போது,  கிழக்கு மாகாண சுதேசத்துறைக்கு குறைந்தளவிலான நிதியொதுக்கப்பட்ட நிலையில், சில வைத்தியசாலை அபிவிருத்திகள் தொடர்பில் நிதி கையாள்கையிலுள்ள சிக்கல் தொடர்பாகவும், சுதேசத்துறையில் குறைந்துள்ள மருந்தகப் பிரச்சினை தொடர்பாகவும் அதற்கென கிழக்கு மாகாணத்திலுள்ள 03 மருந்து தயாரிப்பு நிலையங்களிலுள்ள பிரச்சினைகள், மருந்தகங்கள் அமைப்பது, சுதேசத்துறையில் ஆளனி ஊக்குவிப்பு, அவர்களுக்கான மேலதிக ஊக்குவிப்புக்களிலுள்ள இடர்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
 
வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு கட்டாயம் பயிற்சிச்செயலமர்வு மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், அடுத்த மாகாண சபை பட்ஜட்டில்சுதேச திணைக்களத்திற்கு நிதியை அதிகரிக்க மாகாண பட்ஜட் பிரிவிக்கான பணிப்பாளரிடம் அமைச்சரினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்ட பொத்துவில், கோமாரி, பாண்டிருப்பு, மண்டூர் போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்ட மத்திய மருந்தகத்தினை திறந்து மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இதன் போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், மாகாண திறைசேரி பணிப்பாளர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச்செயலாளர், கிழக்கு மாகாண சுதேச திணைக்கள மாகாணப்பணிப்பாளர், மாகாண சுதேச திணைக்கள் வைத்திய அத்தியட்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here