சுங்காவில அறக்கட்டளையினால் சுங்காவில முஸ்லிம் வித்தியாலயத்திற்கு உதவிகள்

0
308

WhatsApp Image 2017-08-17 at 1.41.00 PMஆரிப் எஸ்.நளீம்

சுங்காவில் முஸ்லிம் மாகா வித்தியாலயத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைய நிவர்த்தி செய்யும் நோக்கிலும் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் கருதியும் சுங்காவில முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நியமிக்கப்பட்ட  கணிதப்பாட தொண்டர் ஆசிரியருக்கான கொடுப்பனவினை சுங்காவில அறக்கட்டளை அமைப்பினர் முன்வந்து பொறுப்பெற்று அதனை நேற்று 16.08.2017ம் திகதி புதன்கிழமை வழங்கி வைத்தனர்.

சுங்காவில் பிரதேசத்தை மையப்படுத்தி பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வரும் சுங்காவில அறக்கட்டளை அமைப்பினர் ஊரின் கல்வி முன்னேற்றத்தை நோக்காகக் கொண்டு இவ்வாறான உதவிகளைச் செய்ய முன்வந்தமை பாராட்டத்தக்கது.

அத்தோடு, இப்பாடசாலையில் பொலிவிழந்து காணப்படும் நான்கு கட்டடங்களுக்கு வர்ணம் பூசுதல், புதிய கட்டடத்துக்கான மின்னிணைப்பினையும் பெற்றுக்கொள்வதற்கான செலவீனங்களை சுங்காவில அறக்கட்டளை அமைப்பினர் பொறுப்பேற்றுக் கொள்வதாக அவ்வமைப்பின் தலைவர் மௌலவி முஹம்மது றியான் வாக்குறுதியளித்தார்.

இந்நிகழ்வில் சுங்காவில அறக்கட்டளை அமைப்பின் உறுப்பினர்கள், பெற்றார்கள், மாணவர்கள் எனப்பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.WhatsApp Image 2017-08-17 at 1.41.00 PM WhatsApp Image 2017-08-17 at 12.23.58 PM WhatsApp Image 2017-08-17 at 12.24.13 PM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here