காத்தான்குடி ஸாவியாவில் மாணவர் பாராளுமன்றத்தேர்தல்

0
291

6-IMG_4062(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கல்வியமைச்சின் சுற்று நிரூபத்தின் அடிப்படையில் இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளில் பாடசாலை மாணவர் பாராளுமன்றம் அமைப்பதற்கான வேட்புமனுக்கல் தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் இடம்பெற்று வருகின்றன.

இதனடிப்படையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி பிரதேச கல்விக் கோட்டத்தின் கீழ் இயங்கி வரும் காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் 2017 மாணவர் பாராளுமன்றத்தேர்தல் நேற்று 16 புதன்கிழமை காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் மௌலவிய்யா நயீமா அப்துல் ஸலாம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி 2017 மாணவர் பாராளுமன்றத்தேர்தல் பணிகளில் வித்தியாலயத்தின் சிரேஷ்ட கணிதப்பாட ஆசான் வித்தியாகீர்த்தி எம்.எம்.அமீர் அலி ஆசிரியர் உட்பட ஏனைய ஆசிரிய, ஆசிரியைகளும் ஈடுபட்டனர்.

பாடசாலை மாணவர் பாராளுமன்றம் அமைப்பதற்கான குறித்த தேர்தலில் காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையிலான 273 மாணவிகள் நேற்றைய தினம் 2017 மாணவர் பாராளுமன்றத்தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்த போதும், 219 மாணவர்கள் மாத்திரமே வாக்களித்திருந்தனர்.

இதில் மொத்தமாக வாக்களிக்கப்பட்ட 219 வாக்குகளில் 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும், 215 வாக்குகளில் மாத்திரமே செல்லுபடியான வாக்குகள் என்றும் காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் 2017 மாணவர் பாராளுமன்றத்தேர்தல் மொத்த முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று பாடசாலை தேர்தல் ஆணையாளரும், ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் அதிபருமான மௌலவிய்யா நயீமா அப்துல் ஸலாம் தெரிவித்தார்.

இதன் போது தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையிலான 219 மாணவிகள் சுமூகமான முறையில் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தலில் சபாநாயகர், பிரதமர், சபை முதல்வர், பிரதிச்சபாநாயகர், பிரதிச் செயற்குழுத்தலைவர், அமைச்சர் 10 பேர், பிரதியமைச்சர் 10 பேர், ஆலோசனை செயற்குழுக்கள் 10 அடங்களாக 45 மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான குறித்த தேர்தலில் 76 பெண் வேட்பாளர்கள் களத்தில் குதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.1-IMG_4056 2-IMG_4063 3-IMG_4077 4-IMG_4047 5-IMG_4044 6-IMG_4062 9-IMG_4073

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here