உழ்ஹிய்யாவின் போது புத்திசாதுரியமாக நடந்து கொள்வது காலத்தின் கட்டாயம்! -என்.எம். அமீன்

0
108

IMG_20170817_170912இன்னும் சில நாட்களில் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடவிருக்கின்றோம். ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யாவை (குர்பானி) நிறைவேற்றுகின்ற போது, நாட்டின் நிலவரங்கள்நாம் வாழுகின்ற சூழல் என்பவற்றைக் கவனத்திற் கொண்டு செயற்படுவது காலத்தின் கட்டாயம்.

உழ்ஹிய்யா தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்குகின்ற மார்க்க சட்டதிட்டங்கள் மற்றும் பொதுவான வழிகாட்டல்களுக்கேற்ப முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டுமென முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா வினயமாக வேண்டிக் கொள்கிறது.

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா மற்றும் ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன்இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

குறிப்பாக, உழ்ஹிய்யாவை நாட்டின் சட்ட திட்டங்கள்விதிமுறைகளுக்கமைய நிறைவேற்ற வேண்டும்.

உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளைக் கொள்வனவு செய்யும் போதும் அவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்லும் போதும் உரிய அத்தாட்சிப்பத்திரங்களைப் பெற்றிருத்தல்மிருகங்களை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப்பயன்படுத்துதல்வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவுக்கேற்ப பிராணிகளை வாகனத்தில் ஏற்றுதல்உழ்ஹிய்யாவுக்குப் பொருத்தமான இடம்நேரம் என்பவற்றைத் தீர்மானித்துக் கொள்ளுதல்குர்பான் தொடர்பான விளம்பரங்களை பொது ஊடகங்களில் பிரசுரிப்பதைத் தவிர்த்துக் கொள்ளல்அவ்வப்பிரதேச நிலவரங்களைக் கவனத்திற் கொண்டு பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஆலோசனைகளைப் பெற்று தனியாகவோ அல்லது கூட்டாகவோ உழ்ஹிய்யாவை நிறைவேற்றுதல்குர்பான் செய்யப்பட்ட பின் விலங்குகளின் கழிவுகளை பொறுப்புணர்வுடன்உரிய முறையில் புதைப்பது முதலான விடயங்களில் முஸ்லிம் சமூகம் கூடிய கவனஞ்செலுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

குறிப்பாக, பல்லினங்களோடு வாழும் நாம்பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படப்படும் வகையிலோ நடந்து கொள்ளவே கூடாது.

போயா தினத்தன்று அறுப்புச் செய்வதை முற்றாகத் தவிர்ந்துக் கொள்வதும் பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யாவை முறையாக நிறைவேற்றுவதும் மிகவும் அவசியமாகும்.

முஸ்லிம் சமூகம் தொடர்ந்தேச்சியாக பல்வேறு சவால்களைதாக்குதல்களை எதிர்நோக்கி வந்த போதிலும், தற்போது ஓரளவு தணிந்திருக்கின்ற நிலையில்இந்த ஹஜ்ஜுப்பெருநாளைக் கொண்டாடவிருக்கின்றோம்.

எனவேசந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கும் சிலர் எமது உழ்ஹிய்யா நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிக்கக் கூடும்.

அத்தகையோருக்கு சந்தர்ப்பமளித்து விடாமல் மிகக்கவனமாகவும் புத்திசாதுரியமாகவும் நடந்து கொள்வது எமது கடமையாகும்.

என்.எம். அமீன்

தலைவர்

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here