கிழக்கு மாகாண சபை இரு மாதங்களில் கலைக்கப்படும்-காத்தான்குடியில் பிரதியமைச்சர் அமீர் அலி

0
219

05வாழைச்சேனை எஸ்.எம்.எம்.முர்ஷித்

கிழக்கு மாகாண சபை இன்னும் இரண்டு மாதங்களில் கலைக்கப்படுமென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஆரயம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் பாலமுனைக் கிராமத்தில் இரண்டு கொங்ரீட் வீதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும், அம்மார் கல்வி கலாசார நிலையத்திற்கு தளபாடங்களும் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் காலங்கள் எங்களை மீண்டும் துரத்துகின்றது. கிழக்கு மாகாண சபை இன்னும் இரண்டு மாதங்களில் கலைக்கப்படும். அதிலே பல மாற்றங்கள் செய்ய வேண்டியேற்படும். அந்த வகையில், கிழக்கு மாகாணத்திற்கு நல்ல சேவைகளைச் செய்யக்கூடிய யாராக இருந்தாலும் பரவாயில்லை. எல்லோருக்கும் சேவை செய்ய வேண்டும்.

இந்த கிழக்கு மாகாணத்தினுடைய காலகட்டத்தில் கல்வி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக கிழக்கு மாகாணத்தினுடைய கல்வி ஒன்பதாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கல்வியைப் பற்றி பரிபூரணமான அறிவைக் கொண்ட கல்வியமைச்சரும், அதைப்பற்றி அடிக்கடி பேசுகின்ற முதலமைச்சரும் இருக்கின்ற கிழக்கு மாகாணத்தில் கல்வியில்  கடைசி மாகாணமாகவுள்ளது.
கிழக்கு மாகாண கல்வி மிகவும் மோசமான நிலைக்குப் போயுள்ளது என்ற குற்றச்சாட்டை நாட்டின் ஜனாதிபதி பகிரங்கமாக முன்வைத்தார். அதனோடு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோர் கல்வியை முன்னேற்றும் பணியைச் செய்ய வேண்டும்.

எனது அரசியல் இலக்கானது, கல்வியை மையப்படுத்தியதாகவேவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் கல்வி சிறக்க வேண்டுமென்று விரும்புகின்றவர்கள், இதைப்பற்றி பிரேரணை செய்கின்றவர்கள், பதிவாக கருதுகின்றவர்களுக்கு முகம் சுழிக்காமல் வரவேற்க வேண்டும்.

சிறுபான்மைச் சமூகத்தைப் பொறுத்த வரையில் கல்வியில் மாத்திரம் தான் முன்னின்று செயற்பட வேண்டும். தமிழ், முஸ்லிம் இரண்டு சமூகமும் நாட்டிலே ஓரளவுக்கு தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்றால் கல்வியோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கும்.

இதிலே எங்களை யாரும் நசுக்கவோ, புறந்தள்ளவோ முடியாது. வியாபாரமாக இருக்கலாம் அல்லது வேறு நிலையமாக இருந்தால் கூட சதி வலைகளை செய்யக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக இருக்கின்ற பொழுது, கல்வி ரீதியான விடயத்தில் எங்களுக்கு யாரும் எதனையும் செய்ய முடியாது. எல்லோரும் கல்வி ரீதியான மாற்றத்திற்கு மாற வேண்டும்.

பிரதியமைச்சரினால் பாலமுனை சீனி ஆலிம் வீதிக்கு ஐந்து இலட்சமும், பழைய வைத்தியர் வீதிக்கு பத்து இலட்சமும் கொங்கிறீட் இடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அம்மார் இஸ்லாமிய கல்வி கலாசார வழிகாட்டல் நிலையத்திற்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தளபாடமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சக்தியானந்தி, பிரதியமைச்சரின் இணைப்பாளர்கள், காத்தான்குடி பொலிஸ் உத்தியோகத்தர், பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.01 02 03 04 05 06 07 08 09 10 11

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here